லைலத்துல்கத்ர்இரவு!!! கண்ணியமும்,மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்கூறுகிறான். ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில் மகத்துவமிக்கஇரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்குஎப்படித் தெரியும்?மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.வானவர்களும்,ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொருகாரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன்97:1-5) முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையைஎதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரதுமுந்திய பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35) லைலத்துல் கத்ரு எந்த நாள்? லைலதுல்கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவுஎன்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்)அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காகமறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றிஅறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போதுமுஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள்.”லைலதுல் கத்ருஇரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்னமனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என்நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாகஇருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு,இருபத்தி ஒன்பது,இருபத்திஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்”என்றார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),நூல்கள்: புகாரி (49),முஅத்தா (615) நபி(ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அதுகுறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூறமுடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை இரவான21, 23, 25, 27, 29ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்றுநபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன. ரமலானில்கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத்தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),நூல்கள்: புகாரி2017,முஸ்லிம்1997 நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும்போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப்பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்திமூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசிஇரவில் (29)இருக்கும்”என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும்நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்தியபாவங்கள் மன்னிக்கப்படும்”என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),நூல்: அஹ்மத் (20700) மேற்கூறியஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர்,ரமலான் மாதத்தில் கடைசிப்பத்து இரவுகளில்21, 23, 25, 27, 29ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான்இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. லைலத்துல் கத்ரின் அமல்கள் லைலத்துல் கத்ர் இரவுக்கென்று விசேஷமான தொழுகையோ,பிரத்தியேகமான வணக்கமோஹதிஸ்களில் காணப்படவில்லை.ஆனாலும்,நம்மில் பலர் நின்று வணங்கவேண்டும்என்பதால் நபி(ஸல்) அவர்கள கற்று தராதவைகளை மார்க்கம் எனும் பெயரில் செய்துவருகின்றனர். மார்க்கத்தில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் அடிப்படையில்செய்பவர்களைப்பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கைசெய்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் நம்மால் ஏவப்படாத செயலை மார்க்கம் என்ற பெயரில் எவரேனும் செய்வார்களேயானால் அது நிராகரிக்கப்படும். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : முஸ்லிம் மேலும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்… வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை. நடைமுறையில் சிறந்ததுஎன்னுடைய நடைமுறை.மார்க்கம் என்ற பெயரில் புதிதாக உருவாகும் ஒவ்வொருசெயல்களும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொருவழிகேடும் நரகில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : புஹாரி லைலத்துல் கத்ர் உடையஇரவுகளில் நின்று வணங்கியும்,குர்ஆன் ஓதியும்,திக்ரு செய்தும் நம்முடையஅமல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். வீணான பேச்சுக்கள்,சண்டைசச்சரவுகள் இவற்றை அறவே தவிர்த்துக்கொண்டு இறைவனிடம் அதிகமதிகம்பாவமன்னிப்பு கோர வேண்டும். லைலத்துல்கத்ர்இரவில்ஓதவேண்டியபிரார்த்தனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல்கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’என்று நான் கேட்டேன். அதற்கு, ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல்அஃப்வ ஃபஃபுஅன்னி’என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது,நஸயி,ஹாக்கிம்,இப்னுமாஜா3850,திர்மிதி3580) اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي (அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ) பொருள்:’இறைவா! நீ மன்னிப்பவன்,மன்னிப்பதை விரும்புகிறாய்,எனவே நீ என்னை மன்னித்து விடு!’ மேற்கண்ட துஆவை நாம் அதிகமதிகம் ஓதி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிகண்ணியமிக்க ரமளானின் மகத்துவமிக்க லைலத்துல் கத்ர் உடைய இரவுகளை அடையமுயற்சி செய்யவேண்டும். இந்த வருடம்தான் நம்முடைய கடைசி ரமளான் என்றஉள்ளச்சத்தோடு துஆ செய்வோமேயானால்,அதுவே நம்முடைய பாவங்களை அல்லாஹ்மன்னிப்பதற்கு போதுமானதாகும். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்அனைவரையும் ஆக்கி அருள்வானாக! நன்றி:tntj Engr.Sulthan
—
—