அல்சர் என்பது உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புண்களைக் குறிக்கும். புண்கள் ஏற்பட்டு, அப்புண்ணில் வலி ஏற்பட்டு, அந்த இடம் பாதிப்படைந்து, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால், அவற்றில் இரண்டாம் தொற்று ஏற்பட்டு, உடல் சோர்வடைந்து, சிகிச்சையில் பெரும் தாமதத்தை ஏற்படுத்துவதே அல்சரின் அறிகுறிகளாகும்.
முன்பெல்லாம் மனஉளைச்சல், உணவு மற்றும் வாழ்க்கை மாற்றத்தால் அல்சர் வருவதாக நினைத்துக் கொண்டிருந்த விஞ்ஞானிகள், இப்பொழுது ஹீலிபாக்டார் பைலோரி (helibactor phylori) அல்லது எச்.பைலோரி என்ற ஒரு வகை பாக்டீரியாவால் அல்சர் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
நேரம் கடந்து உணவு உண்பதும் அல்சர் வர காரணமாக உள்ளது. மேலும் எடை இழப்பு, பசியின்மை, வீக்கம், குமட்டல், வாந்தி ஆகியவை அல்சரின் பிற அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் அவசரத் தன்மை கொண்டவை. குறிப்பாக மலம் ஒரு இருண்ட நிறத்தில் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சரி, இப்போது அல்சரை குணப்படுத்தும் சில விதிமுறைகளை பார்ப்போமா!!!
1. சிவப்பு முட்டைகோஸை சாறெடுத்து அருந்தலாம் அல்லது அப்படியே உண்ணலாம்.