நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

0
233
நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.

* நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.

* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.

* நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.