கார் தயாரிப்பு நிறுவனங்கள், வரிசை கட்டி டீசல் கார்களை விற்பனை செய்து, டீசல் கார்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
'உண்மையிலேயே டீசல் காரை வாங்குவது லாபமா? பெட்ரோல் விலை என்னாகும்? டீசல் விலை என்னாகும்?’ – இந்தக் கேள்விகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு முன், 'என்னுடைய தேவை என்ன, என்னால் காருக்கு என மாதந்தோறும் எவ்வளவு ரூபாய் செலவிட முடியும்? மாதத்துக்கு எவ்வளவு தூரம் காரில் பயணம் செய்வேன்’ என்பதைத்தான் கணக்கிட வேண்டும்.
உதாரணத்துக்கு, ஃபோர்டு ஃபிகோ பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை எடுத்துக் கொள்வோம். விலை உயர்ந்த ஃபிகோ பெட்ரோல் மாடலின் விலை 6,02,532 ரூபாய் (சென்னை ஆன் ரோடு). அதுவே, டீசல் ஃபிகோவின் டாப் எண்ட் மாடலின் விலை 7,16,071 ரூபாய். இரண்டு கார்களுக்குமான விலை வித்தியாசம் 1,13,539 ரூபாய்.