குர்பானி ஆடு – 1
அஜ்மலும், கதீஜாவும் சென்னையின் மையப்பகுதியில் இருந்த அந்த பிரம்மாண்டமான மருத்துவமனை வளாகத்தில் நுழைந்து, வரவேற்பறைக்கு சென்று தாங்கள் கொண்டு வந்திருந்த அந்தக் கடிதத்தை அங்கிருந்த வரவேற்பாளாரிடம் கொடுத்ததுமே, அவர்களின் ராஜ உபசாரம் தொடங்கியது. “டாக்டர் சூரியோட லெட்டர் கொண்டு வந்திருக்காங்க,” என்றபடி அந்தப் பெண் பரபரப்பாக, ‘டை’ அணிந்து கொண்டிருந்த ஒருவாரிடம் போய் காதில் ஏதோ சொல்ல, அவர் பதறியடித்துக் கொண்டு இவர்களை நோக்கி வந்தார்.
“வெல்கம் டு அவர் ஹாஸ்பிட்டல் சார்,” என்று வந்தனம் சொல்லி விட்டு,”நேத்து ராத்திரியே டாக்டர் சூரி எங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டார் சார். உங்களுக்காக ஒரு வி.ஐ.பி.சூட் ஏற்கனவே ‘ப்ளாக்’ பண்ணி வைச்சிட்டோம் சார். பேஷியன்ட் எங்கே சார்” என்று வார்த்தைக்கு
நூறு ‘சார்’ போட்டுப் பேசினார். “வெளியே ஆம்புலன்ஸில் இருக்காரு,” என்று அஜ்மல் சொன்னது தான் தாமதம். அந்த அதிகாரி உடனேயே வார்டு பாய்களை அழைத்தார்.
“வெளியே ஆம்புலன்ஸ் ஒண்ணு வந்திருக்கே! பார்த்து பேஷியன்டை எமர்ஜென்சிக்குக் கொண்டு போக வேண்டியது தானே! என்ன பண்ணிட்டிருக்கீங்க” என்று சாடினார். “ஏற்கனவே பேஷியன்ட் எமர்ஜென்சியிலே தான் இருக்கார் சார்,” என்று அவர்கள் சொல்லவும்,
அஜ்மலுக்கும் கதீஜாவுக்கும் ஆச்சாரியம் தாளவில்லை. இவ்வளவு செல்வாக்கா டாக்டர் சூரிக்கு, அதுவும் உலகப்புகழ் பெற்ற இந்த மருத்துவமனையில்உ
இது போதாதென்பது போல, வெள்ளைக்கோட்டணிந்த இரண்டு இளம் டாக்டர்கள் ஓடி வந்தனர். “சார்! இப்ப காட்பாடியிலிருந்து வந்த பேஷியன்டோட அட்டெண்டர் நீங்க தானேஉ பேஷியண்டோட கேஸ் ஷீட், ப்ரிஸ்க்ரிப்ஷன் எல்லாம் எங்கே சார்? சீனியர் டாக்டர் கேட்கிறாரு!” எனவும் அஜ்மல் வாயடைத்துப் போய், தன் கையிலிருந்த குண்டு ·பைலை அவர்களிடம்
கொடுத்தான். அடுத்த ஐந்து நிமிடங்களில் எமர்ஜென்சியே பரபரப்பானது. சிறிது நேரம் கழித்துஅஜ்மலையும், கதீஜாவையும் அழைத்தார்கள்.
“பேஷியன்ட் உங்களோட அப்பாவா சார்” என்று கேட்ட அந்த சீனியர் டாக்டர்,”வைட்டல்ஸ்
நார்மலாத் தானிருக்கு. ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. எதுக்கும் ஐ.சி.யூவிலேயே வைச்சு கவனிச்சிக்க சொல்லி டாக்டர் சூரி நேத்து போன் பண்ணியிருந்தாரு! கொஞ்சம் பேப்பர்ஸிலே நீங்க கையெழத்துப் போட்டிட்டு, உங்க ரூமுக்குப் போய் இருங்க. கொஞ்ச நேரத்திலே கார்டியோ
தொராசிக் சர்ஜன், அனஸ்தெடிஸ்ட் வந்து உங்கப்பாவோட கண்டிஷனைப் பார்த்திட்டு, எப்ப சர்ஜாரி பண்ணறதுன்னு முடிவு பண்ணுவாங்க!”
அஜ்மலும், கதீஜாவும் அவருக்கு நன்றி தொரிவித்து விட்டு, போட வேண்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு, அவர்களுக்கென்று ஒதுக்கப் பட்டிருந்த அந்த ஆடம்பரமான அறைக்குள் நுழைந்ததும் ஏனோ, பலி ஆடுகளைப் போல பேந்த பேந்த முழித்தனர்.