டுர்ர்ர்ர்ர்.. என்று சத்தத்துடன் மோட்டர் பைக்கைகின் விசையை அங்கும் இங்குமாக அசைத்து அசைத்து என்னுடைய பைக்கை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தேன்..
மற்ற பைக் எல்லாம் என் பின்னால் வெகு தூரத்தில் என்னை துரத்தி பிடிக்க வேகமாக வந்து கொண்டிருந்தார்கள்..
நான் கண்ட்ரோல் பட்டனை இன்னும் அதிக அழுத்தம் கொடுத்து அமுக்க.. என்னுடைய பைக் பறந்தது..
எதிரே வந்து கொண்டிருந்த தடைகளை எல்லாம் தாவி தாவி லாவமாக என்னுடைய பைக்கை ஓட்டினேன்..
என் உடம்பும்.. என் பைக்கின் ஓட்டத்திற்கு ஏற்ப வலதும் புறமுமாக அசைத்து அசைத்து கொண்டிருந்தது..
ராஜா தம்பி.. பைக்கை அப்புறம் ஓட்டலாம்.. ஹோம குண்டலத்தில் நான் மந்திரம் சொல்ல சொல்ல.. நெய் ஊத்து.. என்ற என் அருகில் இருந்த ஐயர் சொல்ல..
நான் ஒரு கையால் விடியோ கேமில் பைக்கை ஓட்டிக் கொண்டே ஐயர் சொன்னது போல.. இன்னொரு கையில் வேண்டா வெறுப்பாக ஹோம குண்டலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூனில் நெய் ஊற்றி கொண்டிருந்தேன்..