அபி என்கிற அழகு பிசாசு

0
176
அன்று சண்டே. ஆபீஸ் கிடையாது. காலையில் இருந்து வெளியே சுற்றிவிட்டு, மதியம் ஒரு மணிக்குத்தான் என் ரூமுக்கு திரும்பினேன்.
ட்ரெஸ் எல்லாம் கழட்டிப் போட்டுவிட்டு, மெத்தையில் அக்காடாவென்று விழுந்தேன்.
ஒரு ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. என் செல்போனுக்கு பொறுக்கவில்லை. சிணுங்கியது.
எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தேன். சசி கால் பண்ணுகிறான். பிக்கப் செய்து பேசினேன்.
“சொல்லுடா..!!”

“மச்சான்.. எங்க இருக்குற இப்போ நீ..?”

“ஏன்..? ரூம்லதான்..”
“எங்கேயாவது வெளில போகலாமா..?”
“எங்க..?”
“எங்கனா போலாண்டா. ரொம்ப போரடிக்குது..!!”
“இப்போதாண்டா வெளில போயிட்டு வந்தேன். டயர்டா இருக்கு..!!”
“மசுரு டயர்டா இருக்குது. ச்சீ கெளம்பி வா..!!”
“இல்லை மச்சான்.. இப்போதான்..”
“ங்கோத்தா.. இப்போ வரப் போறியா இல்லையா நீ..?”
“எங்கடா போலாம்னு சொல்ற..?”
“நீ கெளம்பி வொய்ட் ரோட் ஜன்க்ஷனுக்கு வந்துடு. அங்க வச்சு டிஸைட் பண்ணிக்கலாம்..”
“ம்ம்..”

“லேட் பண்ணிடாத. நான் இன்னும் பிஃப்டீன் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்..”

நான், “சரிடா..!!” என்று சொல்லிவிட்டு கடுப்புடன் காலை கட் செய்து செல்போனை தூக்கி எறிந்தேன்.

“ச்சே..!! ங்கோத்தா.. இவன் இம்சை தாங்க முடியாது..!!” என்று மனதுக்குள் திட்டிக் கொண்டேன்.
எழுந்து முகத்தை கழுவிக்கொண்டேன். சலவை செய்து வைத்த வேறு உடைகளை அணிந்து கொள்ள ஆரம்பித்தேன்.
ரெடியாகும் முன், கொஞ்சம் என்னைப் பற்றி சொல்லி விடுகிறேன்.
பெயர் அசோக். படித்தது எம்.எஸ்.சி மைக்ரோ பயாலாஜி. காலேஜ் முடித்து ஒரு வருடம்தான் ஆகிறது. ஒரு குப்பை கம்பெனியில், படித்ததற்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மாதமானால் எட்டாயிரம் சம்பாதிக்கிறேன்.
எனது சொந்த ஊர் திண்டுக்கலுக்கு பக்கம். படித்ததும், இப்போது வேலை பார்ப்பதும் சிங்கார சென்னை. 1500 வாடகைக்கு இந்த பாடாவதி ரூமில் தங்கியிருக்கிறேன்.

இந்த “சசி என்கிற சசிதரன்”, காலேஜ் முதல் நாளில் இருந்தே என் பிரண்ட். அவனுக்கு சொந்த ஊர் இந்த சென்னையேதான்..!!

நான்தான் மிடில்க்ளாஸ் ஃபேமிலியில் இருந்து வந்தவன். சசி நல்ல பணக்காரன். சொல்லப்போனால் காலேஜில் எனக்கு தம், தண்ணி வாங்கிக் கொடுத்தே சசி என்னுடைய உயிர் நண்பன் ஆகிப் போனான்.
அவன் இன்னும் எந்த வேலையிலும் ஜாயின் பண்ணவில்லை. அப்படி ஒரு ஐடியா அவனுக்கு இருப்பது மாதிரியும் தெரியவில்லை. தலைவர் ஜாலியா ஊர் சுத்திக்கிட்டு இருக்காரு.
நான் ஷர்ட்டை எடுத்து அணிந்துகொண்டு, அக்குளுக்கு பாடிஸ்ப்ரே அடித்தபோது, என் செல்போன் மீண்டும் அடித்தது.
“இம்சை புடிச்ச நாய்..!!” என்று வாய்க்குள் முனுமுனுத்துக்கொண்டே செல்போனை எடுத்துப் பார்க்க, அதிர்ந்து போனேன்.
இப்போது அழைத்தது சசி இல்லை. சசியின் தங்கை அபி. என் காதலி.
பட்டென்று பிக்கப் செய்து காதில் வைத்தேன்.
“ஹாய் அபி..!!” என்றேன் தேன் ஒழுகும் குரலில்.
ஆனால் அவளோ, “ரூம்லதான இருக்குற..?” என்றாள், என் தேன் ஒழுகலை கண்டுகொள்ளாமல்.
நான், “ஆமாம். ஏன்..?” என்றேன்.
“சரி. ஒரு டென் மினிட்ஸ் எடுத்துக்கோ. டென் மினிட்ஸ் முடியுறப்போ, நாம வழக்கமா சந்திப்போமே, அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்கு வந்துடு. சரியா..?”
“எ.. எதுக்கு..?” என்று நான் தயக்கமாய் கேட்க, “ஓஹோ..!! காரணம் சொன்னாத்தான் வருவியோ..?” என்று அவள் சூடாக கேட்டாள்.
“இல்லை அபி.. திடீர்னு கூப்பிடுறியே..” என்று இழுத்தேன்.
“திடீர்னு கூப்பிடாம, அஞ்சு நாளைக்கு முன்னால அப்பாயின்மன்ட் வாங்கனும்னு சொல்றியா..?” என்றாள்.
“அப்படி இல்லை அபிம்மா. இப்போதான் உன் அண்ணன் கால் பண்ணினான்..!!”
“ஏன் என்னவாம்..?”
“வெளில போகலாம்னு சொன்னான். அதான் என் கால்ஷீட்டை அவனுக்கு கொடுத்திட்டேன்..!!”

“ஆமாம், இவரு பெரிய ஹாலிவுட் ஆக்டரு. கால்ஷீட் கொடுக்குறாரு..!! கால்ஷீட், கைஷீட் எல்லாம் கட் பண்ணிட்டு, காம்ப்ளக்சுக்கு வந்து தொலை..!!”