சங்கீதா, தோஸா கார்னர், ஷேக்ஸ் அண்ட் க்ரீம்ஸ், முருகன் இட்லி கடை, சரவணபவன், சவேரியா என்று சுவைக்கப்பட்டது. ஷேக்ஸ்

0
94

ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. பிப்ரவரி 2009-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு

இது ஒரு மாதம் இருமுறை சடங்காகவோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வரும் விழாவாகவோ இங்கு நடத்தப்படுகின்றது. ஒரு மாதிரி இதை எல்லாம் எதிர்பார்த்திருப்பது போலவே இவர்கள் நடந்து கொள்கிறார்கள். வின்சென்ட் வான்கா எவ்வாறு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனக்கு ஏற்படும் மனப்பிறழ்வுக்கு தயாரானாரோ, அதுபோல் இம்மக்களும் ஹர்த்தாலுக்கு தயாராகவே செய்கிறார்கள். முந்தின நாள் மாலையே அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய் எல்லாம் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். மறு நாள் போலிஸ் பேட்ரல் அவ்வப்போது நகர்வலம் வர, கொட்டாவி விட்டுக் கொண்டு சூர்யா டி.வி.யிலோ, ஏஷியாநெட்டிலோ ஆழ்ந்து நாளைக் கழிக்கிறார்கள்.

ப்ளெய்ன் ஷ்ரட், டார்க் பேண்ட், பூப் போட்ட டை, பாலிஷ்ட் ப்ளாக் ஷூ என்று ஒப்பனைகளோடு கம்பெனிக்கு செல்ல நடந்து போகையில் அடைந்த கதவுகளோடு ஷாப்புகளையும், இறுக்க மூடிய பலகைகளோடு பெட்டிக் கடைகளையும் பார்க்க கொஞ்சம் பயம் வருகிறது. வழியில் யாராவது செங்கொடித் தோழர்களோ, காவிக் கொடி அன்பர்களோ கேட்டால், கொளுத்து வேலைக்குப் போகிறேன் என்று சொன்னால், போக விட்டு பொடனியில் அடிப்பதற்கான சாத்தியங்கள் இருநூறு சதம் இருப்பதால், பயத்துடனே நடக்க வேண்டியதாக இருக்கிறது.