டைரக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பி நடிகர்!

0
90

டைரக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பி நடிகர்!

முதல் படத்திலேயே கிராமத்து நாயகனாக வெற்றிவாகை சூடிய அந்த தம்பி நடிகர் அடிப்படையில் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தவர். அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் நல்ல கதைக்காக காத்திருந்து நடித்து வருகிறார். இயக்குனர் துறையில் தனக்குள்ள அனுபவம் தான் நடிக்கும் படங்களில் தெரிய வேண்டும் என நினைக்கும் அந்த தம்பி நடிகர் தற்போது நடித்து வரும் புதிய படத்தில் கொஞ்சம் ஓவராகவே மூக்கை நுழைக்கிறாராம். எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பதால் படத்தின் டைரக்டர் ரொம்பவே அப்செட். சமீபத்தில் படத்தில் இடம்பெறப் போகும் பாடல் என்று கூறி ஒரு பாடலை நாயகனுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார் டைரக்டர். பாடலை கேட்ட ஹீரோ, இந்த பாட்டு வேணாம் என்று சொல்லி விட்டாராம். இதனால் அதிர்ச்சியுடன் கூடி ஆக்ரோஷத்தில் இருக்கிறதாம் இயக்குனர் தரப்பு.

ஏற்கவே இந்த தம்பி நடிகரின் அண்ணன் சூட்டிங் ஸ்பாட்டில் ஓவராக பில்ட்-அப் கொடுப்பதால் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்கள் அவஸ்தை பட்டு வருதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தம்பியும், அண்ணன் வழியில் தன்னை மாற்றிக் கொண்டிருப்பது எங்கே போய் முடியுமோ? என புலம்புகிறார்கள் அஸிஸ்டென்ட் டைரக்டர்கள்.