ஜானி திலகன் வீட்டுக்குள்ளே நுழைந்தபோது வீடே களேபரமாக இருந்தது. ஜானியைப் பார்த்ததுமே கையைப் பிடித்துக்கொண்டு மிக சந்தோஷமாக, ’கத்தாருக்குப் போகிறேண்டா,’ என்று அறிவித்தான். இவன் படித்த படிப்புக்கு அங்கே என்ன வேலை கிடைத்திருக்கும் என்று ஜானியின் மூளைக்குள் கேள்வி குடைந்தது. எது எப்படியோ, எங்கேயாவது போய் சந்தோஷமாக இருந்தால் சரி தான் என்று எண்ணிக்கொண்டான்.
“இன்னும் அரை மணி நேரம் கழிச்சு வந்திருந்தேன்னா என்னைப் பார்த்திருக்க முடியாது,” என்றான் திலகன். ’நல்ல வேளை’ என்று எண்ணிக்கொண்டான் ஜானி.
“உன்னை ரொம்ப நாளைக்கப்புறம் இன்னிக்குத் தாண்டா இவ்வளவு சந்தோஷமாப் பார்க்கிறேன்,” என்று ஜானி கூறினான்.
“ஆமாண்டா! நீ சொல்லறது நூத்துக்கு நூறு உண்மை,” என்றான் திலகன் மகிழ்ச்சியோடு.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே திலகனின் அம்மா உள்ளேயிருந்து வெளியே வந்தாள்.
“குட் மார்னிங் ஆன்ட்டி!”