கேரளத்து சேச்சி வனிதா

0
239
கோடை அப்போது தான் தொடங்கியிருந்தது. ஜானி என்று நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஜனார்த்தனன் கல்லூரியில் முதலாண்டை முடித்து விட்டு ஊருக்கு வந்திருந்தான். அவனது பள்ளிக்கால நண்பர்கள் இன்னும் விடுமுறைக்காக ஊர் வந்து சேர்ந்திருக்கவில்லையென்பதால் வந்ததிலிருந்தே அவனுக்கு சலிப்பாக இருந்தது. ’இந்த வெயிலில் எங்கே போகிறேன்?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டபடி அவன் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கியபோது தான் திலகனின் ஞாபகம் வந்தது. அவன் தான் பள்ளிப்படிப்போடு நிறுத்தி விட்டு, மற்ற மலையாளிகளைப் போல அரபு நாடுகளுக்குப் போக முயற்சி செய்தபடி ஊரிலேயே தங்கி விட்டிருந்தானே? அவனைப் போய்ப் பார்த்தாலென்ன? மடையன், கொஞ்சம் பொறுமையாகப் படித்துத் தொலைத்திருந்தால் டிகிரி முடித்து விட்டு இன்னும் நல்ல வேலைக்குப் போயிருக்கலாம். ஆனால், அவனை மேலே படிக்க விடாமல் தடுத்தது எதுவோ, யார் கண்டார்கள்?

ஜானி திலகன் வீட்டுக்குள்ளே நுழைந்தபோது வீடே களேபரமாக இருந்தது. ஜானியைப் பார்த்ததுமே கையைப் பிடித்துக்கொண்டு மிக சந்தோஷமாக, ’கத்தாருக்குப் போகிறேண்டா,’ என்று அறிவித்தான். இவன் படித்த படிப்புக்கு அங்கே என்ன வேலை கிடைத்திருக்கும் என்று ஜானியின் மூளைக்குள் கேள்வி குடைந்தது. எது எப்படியோ, எங்கேயாவது போய் சந்தோஷமாக இருந்தால் சரி தான் என்று எண்ணிக்கொண்டான்.

“இன்னும் அரை மணி நேரம் கழிச்சு வந்திருந்தேன்னா என்னைப் பார்த்திருக்க முடியாது,” என்றான் திலகன். ’நல்ல வேளை’ என்று எண்ணிக்கொண்டான் ஜானி.

“உன்னை ரொம்ப நாளைக்கப்புறம் இன்னிக்குத் தாண்டா இவ்வளவு சந்தோஷமாப் பார்க்கிறேன்,” என்று ஜானி கூறினான்.

“ஆமாண்டா! நீ சொல்லறது நூத்துக்கு நூறு உண்மை,” என்றான் திலகன் மகிழ்ச்சியோடு.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே திலகனின் அம்மா உள்ளேயிருந்து வெளியே வந்தாள்.

“குட் மார்னிங் ஆன்ட்டி!”