மச்சி, நீ கேளே? மச்சி, நீ கேளே? மச்சி, நீ கேளே?

0
131

“ஏண்டா, அவனவனுக்கு என்னென்னமோ கவலை, உனக்கென்னடானா இப்படியொரு கவலை”
இந்த வார்த்தைகளை கேட்டிருப்பவர்கள் பலர் இருப்பீர்கள். இந்த வார்த்தை எங்கிருந்து கண்டு புடிச்சாங்கதெரியுமாங்க, என்னோட வாழ்க்கை வரலாற்ற தெரிஞ்சுட்டப்பறம் தானுங்க. அந்தக் கொடுமைய….
மச்சி, நீ கேளே?
மச்சி, நீ கேளே?
மச்சி, நீ கேளே?
சரி விடுங்க, நானே எல்லாத்துக்கும் பொதுவா சொல்லறேன்.
இந்த நகரத்துல என் முதலாளி பேரை சொன்னா, தெரியாதவன் யாருமிருக்க மாட்டாங்க. அப்பேர்ப்பட்டரவுடிதான் என் முதலாளி. ரவுடியுசம் மட்டுமில்லீங்க, கட்ட பஞ்சாயத்து இன்ன பிற தொழில்கள் செஞ்சுபொழைக்கிற கண்டாரோலி பசங்கள்ல என் முதலாளியும் ஒருவன். என்னடா அப்பேர்ப்பட்டவர்னுசொல்லிட்டு, இப்படி கெட்ட வார்த்தையால திட்டறேனுதானே பாக்கறீங்க. அட, முதலாளியுனா அவனுக்குவலது கையோ, இடது கையோ மாதிரியில்லீங்க நான். அவன் கெஸ்ட் ஹாவுஸ்ல இருக்கிற சின்ன சின்னவேலைகளை பாக்குற வேலைக்காரங்க நான்.
என் பேரு சரண்ராஜ். எனக்கு இப்போ வயசு 24 ஆகுதுங்க. இந்த வயசிலே படிக்கிறத விட்டுட்டு,கஷ்டப்பட்டிடிருக்கும் ஆளில்லாத அனாதைதான் நான்.
ஆம். எல்லா பசங்களை போலவே நானும் சின்ன வயசுல துறுதுறுவென பள்ளிக் கூடம் போயிட்டு,ரொம்பவும் ஜாலியாதாங்க இருந்தேன். எங்கம்மாவுக்கும், எங்கப்பாவுக்கும் என் மேலே பாசம் அதிகம்.நான்தான் அவங்களோட ஒரே பையன் என்கிறதால என்னை ரொம்பவும் செல்லம் கொடுத்து வளத்தாங்க.எங்கப்பா இப்ப என் முதலாளிய இருக்கிறவன் கிட்டே அடியாள வேலைக்கு இருந்தார். என்னதான் வெளியேசொல்லிக்க முடியாத வேலை தான் என்னப்பாவுக்கு என்றாலும், போதியளவு பணம் கிடைச்சதாலஎங்கப்பாவுக்கு அப்போதைக்கு அதுதான் பெரிதாகப் பட்டது. அதனால் நாங்களும் எந்த விதமான சிரமமும்இல்லாம இருந்தோம். எனக்கு என் பள்ளி நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுத்திட்டும், எப்பவும் சந்தோசமாவிளையாடிட்டும்தான் இருக்க புடிக்கும்.
ஆனா, என் சந்தோசம் உண்மையிலேயே அந்த கடவுளுக்கு புடிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஆமாம், கடவுள் என்னுடன் விளையாட ஆரம்பித்தார்.
நான் 7வது படிச்சிட்டிருக்கையில, வகுப்பில் பாடம் நடந்திடிருக்கும் சமயம். டீச்சர் பாடம் நடத்திடிருக்க,அலுவலக வேலையாள் ஒருத்தர் என் டீச்சரிடம் வந்து காதில் ஏதோ ஓத, டீச்சர் கண்ணில் கண்ணீருடன் என்கிட்டே வந்தார். நான் என்னவென அவங்கமுகத்த பாக்க, அவங்க என்னை பையெடுத்துட்டு வீட்டிற்கு போகசொன்னாங்க. நானும் என்னவென தெரியாம கிளம்பி போக, என் வீட்டில் நிறைய கூட்டம் நின்றிருக்க, என்பெற்றோர் ஒரு கார் விபத்துல இறந்திட்டதாக சொன்னாங்க. எனக்கு என்ன? ஏது? என யோசிச்சுபாக்கறதுக்குள் என் பெற்றோர் உடல் சவக்கிடங்கு போய் சேர்ந்திட்டது. என் பாட்டி என்னை வளர்க்கும்பொறுப்பை ஏத்துக்க, எங்க வீட்டை வித்திட்டு அவங்க வீட்டில் வளர்ந்தேன். எல்லாம் கண்ணிமைக்கும்நேரத்துல நடந்துமுடிய, எனக்கு எல்லாம் கனவு மாதிரியிருந்தது. என் அப்பாவின் இறப்பு என் முதலாளிக்குதெரிந்திட, அவர் ஒரு நாள் எங்க பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். என்னை மாதிரி எங்க பாட்டிக்கும்யாருமில்லை, எங்கதாத்தன் முதலிலேயே இறந்திட்டார். அது மட்டுமில்லாம எங்க பாட்டியும் அந்தமுதலாளியின் வீட்டில வேலை செய்பவள்தான் என்பதால, அக்கறையா விசாரிக்க அவன் வந்திருந்தான்.எங்க வீட்டை பாத்தவன், எங்க பாட்டியிடம் “இனிமே நீங்க வீட்டிவேலைக்கு வேண்டாம், எனக்கு கெஸ்ட்ஹாவுஸ் ஒன்னிருகு. அங்க வேலைக்கு யாருமில்லை, வாட்ச்மேன் மட்டும் தான். அங்க நீங்க தங்கி, வீட்டுவேலைய கவனிச்சுக்குங்க. அடிக்கடி யாராவது வந்தா, அவங்களுக்கு உபசரணை பண்ணனும். அது போகசம்பளம் அதிகமா தாரேன்” என சொல்ல, என் பாட்டியும் என்ன செய்வதென தெரியாம சம்மதிச்சிட்டாள்.நாங்க அன்றிலிருந்து என் முதலாளியின் கெஸ்ட் ஹவுஸில் வேலைக்கு போனோம். ஆனாலும் அது பெரியபங்களா மாதிரி. என் படிப்பும் கெட்டு போயிட, நானும் வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்தேன்.
அங்கே எப்பாவது சில பெண்கள் வருவாங்க. பின் என் முதலாளி வருவார், மத்தபடியெலாம் சொல்லிக்கிறமாதிரி ஆட்கள் வர மாட்டாங்க. அதனால எனக்கு அவ்விடம் சொர்க்கம் மாதிரி இருந்தது. யாருமில்லா பலநேரங்களில் அது என் சொர்க்கபுரி.
வருடங்கள் ஓட, பின்புதான் அங்கே என்ன நடக்கிறதென தெரிஞ்சிக்க ஆரம்பித்தேன். அங்கே வரும்பெண்கள், விலையதிகமான விபச்சாரிகள்.