ஆள் நடமாட்டமேயில்லை! அது சரி! மண்டை பிளக்கும் சென்னை K.k. நகர் வெய்யிலில் இந்த பார்க்கிற்குயார் வரப்போகிறார்கள். அவர்களுக்கு என்ன தலையெழுத்தா! கை கடிகாரத்தை பார்த்தேன் … மணி 3.45.பார்க்கின் உள்ளே போகலாமா ..இல்லை வாசலிலேயே நிற்கலாமா என்று முடிவு எடுக்க முடியாமல் நின்றுகொண்டிருந்தேன்.
ஜஸ்ட் எ மினிட்.. என்னை பற்றி.. நான் ராகேஷ் குமார். வயது 24. நல்ல உயரம். தலையில் நிறைய முடி..ஆனால் கொஞ்சம் அறிவு (இது என் அப்பா அடிக்கடி சொல்வது!). உங்கள் பக்கத்து வீட்டில் அடிக்கடி நீங்கள்பார்க்கும் இளைஞர்களை போல இருப்பேன் நான். தொழில் அதிபரான என் அப்பா சஞ்ஜீவ் குமாருக்கு ஒரேவாரிசு! இப்போதுதான் நான் வீட்டை விட்டு ஓடி வந்தேன். வந்து நாலு மணி நேரம்தான் ஆனது…திரும்பவீட்டுக்கு போக கூடாது என்பது என் இப்போதய தீர்மானம்.
ஏன்…
இந்த அப்பாவிற்கு வேறு வேலையில்லை, நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒரு தொழிற்சாலையைகட்டிவிட்டு அதை மேனேஜ் செய், அதை பார், இதை செய் என்று ஒரே அட்வைஸ்…. நோ என்றால்தண்டசோறு, தீவட்டி தடியன் என்று ஒரே பட்டப்பெயர் வழங்கல்… அதான் வீட்டுக்கே வருவதில்லை என்றுவந்து விட்டேன். வந்த பிறகுதான் தெரிகிறது ஒரு நாளைக்கு கூட காலம் ஓட்ட முடியாது என்று… பேசாமல்வீட்டுக்கு போகலாமா என்றால் சுய கௌரவம் தடுக்கிறது…