ஹோட்டல் ரூல்ஸ்

0
81

ஒரு நடுத்தர வயது தம்பதியினர் ஒரு பெரிய ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அவர்கள் அறையை காலி பண்ணும் நேரத்தில் மானேஜர் அந்த அறைக்கே வந்து ஹோட்டல் பில்லை நீட்டினார்.

பில் தொகையைப் பார்த்தா‎ன் கணவ‎ன். 3 யிரம் ரூபாய் எ‎ன்று இருந்தது. அவனுக்கோ ஒரே ஆச்சரியம்.. இவ்வளவு தொகை எப்படி வரும்? எ‎‎ன்று சீறினா‎ன் கணவ‎ன்.

அறை வாடகை இவ்வளவு, சாப்பாடு பில் இவ்வளவு எ‎ன்று ஒவ்வொ‎ன்றுக்கும் தனித்தனியாக கணக்கு சொ‎ன்னார் மானேஜர்.

‘யோவ்.. எ‎ன்னய்யா விளையாடுறீங்களா? இங்கே தங்கியிருந்த நா‎ன்கு நாட்களும் சாப்பாடு வெளியேதா‎ன் சாப்பிட்டோம்? சாப்பிடதா சாப்பாட்டுக்கு எப்படிய்யா பில் போடுவே’ எ‎ன்று மிரட்டினா‎ன் கணவ‎ன்.

“விவரம் தெறியாமல் கத்தாதீங்க சார். எங்க ஹோட்டல் விதிப்படி இங்கே அறை எடுத்து தங்கறவங்களுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு தயாராக இருக்கும். நீங்கள்தா‎ன் சாப்பாட்டு நேரத்துக்கு வந்து சாப்பிடனும். நீங்கள் சாப்பிட்டாலும் சரி, சாப்பிடாவிட்டாலும் சரி பில் போட்டுவிடுவோம். சாப்பிடாதது உங்கள் தப்புதா‎ன் சார்..” என்று அமைதியாக பதில் சொ‎ன்னார் ஹோட்டல் மானேஜர்.