நான் இப்போ மேரேஜ் ஆகி ஃபேமிலோடு சிங்கப்பூர்ல செட்டில் ஆகி விட்டேன். பசங்களும் வளர்ந்து ஸ்கூலுக்கு போய் கிட்டு இருக்காங்க. ஒவ்வொரு வருடமும் வெகேஷனுக்கு ஊருக்கு வர பிளான் போட்ட போது அது கணவர் வேலை அல்லது பசங்க படிப்பு காரணமாக ஊருக்கு போக முடியாமல் தடை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.
ஆனால் இன்னொரு பிரச்னை என்ன வென்றால் என் குழந்தைகளுக்கு சிங்கப்பூர் சூழலும் வாழ்க்கை முறையும் பிடித்து போய் விட்டது. லீவுக்கு லீவுக்கு கூட அவங்களுக்கு சொந்த நாட்டுக்கு திரும்ப இஷ்டம் இல்லை. நானும் கணவரும் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் எந்த பயனும் இல்லை. நீங்க ரெண்டு பேரும் வேணா போய்ட்டு வாங்க. நாங்க இங்கேயே ஆன்லைன்ல ஃபுட் ஆர்டர் பண்ணிட்டு ஜாலியா வீடியோ கேம் விளையாடி கொண்டு வீட்டில் பொழுதை கழிக்கிறோம் என்று சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு தைரியமும் வந்து விட்டது.
பிள்ளைகளை கன்வின்ஸ் பண்ண நானும் கணவரும் முயன்று முயன்று ஒவ்வொரு வெகேஷன் லீவும் தாண்டி விட்டது, வருடமும் ஓடி விட்டது. ஆனா இந்த தடவை நான் ஊருக்கு போயே ஆக வேண்டிய நிர்பந்தம் வந்து விட்டது. என் ஒரே அண்ணாவோட மகள் வயசுக்கு வந்து அவளுக்கு அத்தை சார்பில் சீர்,சடங்குள் செய்ய வேண்டியது இருப்பதால் நான் மட்டும் டிக்கெட் போட்டு இந்தியா திரும்பி சொந்த ஊரில் வந்து இறங்கினேன்.