கனகா என்னோட ஆபீஸ் தோழி. என்னை விட வயதில் மூத்தவள். ஆனால் ஆபீஸில் எனக்கு இளையவள் தான். வந்த புதிதில் கனகாவின் நடை,உடை பாவானையை பார்த்து விட்டு அவள் பெரிய திமிர் பிடித்தவள் போல என்று யாருமே அவளிடம் நெருங்கி பேசாத போது நான் தான் அவளிடம் முதல் முறையாக பேசி பழகினேன். அதற்கு பிறகு அவளுக்கு ஆபீஸ் வேலைகளுக்கு டிரெயினிங் கொடுத்து இப்போது திறமையான ஊழியர் என்று பெருமை பெற்று இருக்கிறாள்.
அவளுக்கு ஆபீஸ் வேலையில் எந்த சந்தேகம் வந்தாலும் என்னிடம் கேட்க ஆரம்பிக்க,அதனால் ஆபீஸில் அடிக்கடி நாங்கள் மட்டுமே நெருக்கமாக பேசி கொண்டு இருந்ததால் அனைவரும் எங்களை ஒரு லவ் ஜோடியைப் போலவே பார்த்து கண்,காது மூக்கு வைத்து காதல் கதைகளை எழுத ஆரம்பித்து விட்டார்கள்.
அது அனைவருக்கும் ரொம்ப ஸ்வாரஸ்யமான செய்தி என்பதால் அவர்களை சொல்லி குற்றமில்லை. அது எல்லா இடத்திலும் நிகழ்வது தான். ஆனால் நானும் கனகாவும் அது பற்றி தெரிந்தாலும் வெளிக்காட்டி கொள்ளாமல் எப்போதும் போல் பேசி பழகினோம்.