பள்ளியில் என் மகளை விடவும், அழைத்து வரவும் போகும் போது தான் சுகந்தி எனக்கு அறிமுகம் ஆனாள். அவள் மகளும் அதே பள்ளியில் என் மகளோடு ஒரு வகுப்பில் தான் படித்தாள். பெரும்பாலும் என் மகள் சார்பாக பள்ளிக்கு நானும், அவள் மகள் அவளும் போய் வருவோம். அதே போல் தான் பள்ளி பேரன்ட்ஸ் மீட்டிங் மற்றும் ஆண்டு விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் சுகந்தியை பள்ளியில் சந்தித்து இருக்கிறேன்.
சுகந்தியோடு அறிமுகம் ஆகி பேசத் தொடங்கி சில வாரங்கள் ஆனாலும் அப்போதைக்கு எங்கள் முகவரி மகளின் விருப்பு வெறுப்புகளை மட்டுமே பகிர்ந்து கொண்டோம். மெதுவாக என் மகள் மூலம் சுகந்தியின் போன் நம்பர் தெரிந்த பிறகு முதலில் எங்கள் மகள்கள் தங்கள் ஹோம் ஒர்க், பாடம், பள்ளி சம்பந்தமாக உரையாட ஆரம்பித்தார்கள். அவர்களுக்கே சந்தேகம் வரும் விஷயங்களில் நானும் சுகந்தியும் அதே லைனில் பேச ஆரம்பித்தோம். பிறகு மெதுவாக நாங்களே ஒருவருக்கு ஒருவர் பேசும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டோம்.