சில தனி பட்ட காரணத்தால், என்னால் கதையை உரிய நேரத்தில் பகிர முடிய வில்லை.
செல்வ மணி வீட்டை விட்டு சென்றதும், ஜோ என்னிடம் அலெக்ஸ், நாளைக்கு ஏற்கனவே ஜெகன் மாரீஸ் வராங்க, இப்போ செல்வ மணியும் வர போரான், நம்ம வாழ்கையில் இது தான் மறக்க முடியாத தீபாவளியாக இருக்க போகிறது என்றான். அப்போதுதான் எனக்கு எங்கள் திட்டத்தில் பெரிய பிரச்சனை இருப்பது தெரிந்தது.
ஜோ அதை முற்றிலும் மறந்து விட்டான். என்னை பார்த்த அவன் என்னடா பேய் அறைந்த மாறி இருக்க என்றான். நான் மெதுவாக சிவா uncle என்றேன். அந்த பெயரை கேட்டதும் ஜோ “fuck” என அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
ஆம் எங்கள் திட்டத்தில் இருக்கும் பெரிய பிரச்சினை சிவா uncle. என் தந்தை மற்றும் மாமா வின் பிசினஸ் பார்ட்னர். எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து தீபாவளி என்றால் அது சிவா uncle வீட்டில் தான். அது குடும்ப மரபாகி விட்டது.
அதுபோல கிறிஸ்துமஸ் என்றால் எங்கள் வீட்டில் வைத்து கொண்டாடுவது வழக்கம் ஆகி விட்டது. பொங்கல் என்றால் அனைவரும் வெளியூர் செல்வது என்றாகி விட்டது. நாளை எங்களால் நாங்கள் நினைத்தது போல மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்ற உண்மை இருவரும் மனதையும் கலங்க வைத்தது. இது ஜெகன் மாரீஸ் ஐ விட செல்வ மணிக்கு மிகவும் கவலை தரக்கூடிய செய்தி.
நாங்கள் மனம் நொந்து இருக்கையில் ஜெகன் ஃபோன் செய்து, டேய் அலெக்ஸ், நீங்க எப்போவும் தீபாவளிக்கு இங்க இருக்க மாட்டிங்க. அப்பறம் எப்படி நாளைக்கு நாம நாலு பேரும் ஜாலி பண்ணுறது என்றான். (அவன் பல வருடமாக என்னுடன் ஸ்விம்மிங் கிளாஸ் வருவதால் அவனுக்கு இது தெரிந்து இருந்தது). நான் அதற்கு, இப்போது தான் எனக்கும் நினைவு வந்தது. கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் வீட்டுல பேசிட்டு சொல்லுறேன் என்று ஃபோன் ஐ வைத்து விட்டேன்.
பின் ஜோ விடம் பேசி, வீட்டிற்க்கு என் அப்பா முதலில் வந்தால் அவரிடம் ஜோ பேசுவதாகவும், ஜோ அப்பா வந்தால் நான் பேசுவதாகவும் முடிவு செய்தோம். அப்போதுதான் சற்று யோசித்து பார்ப்பார்கள் என்று, இல்லை என்றால் ஒரே வார்த்தையில் முடியாது என்பது தான் பதிலாக வரும்.
7 மணிக்கு என் தந்தை தான் முதலில் வீட்டிற்க்கு வந்தார், உடனே திட்டத்தின் படி அவரிடம் “மாமா, நாளைக்கு நாங்க நம்ம வீட்டுல தீபாவளி கொண்டாட போறோம்” என்றான் ஜோ. அதை கேட்ட என் தந்தை “நீதான் உனக்கு பதிலா ஜோவை கேக்க சொன்னியா?” என்று முறைத்து கொண்டே என்னை பார்த்தார்.
அப்போது ஜோ, “இல்லை மாமா நான்தான் கேக்குறேன், அலெக்ஸ்க்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை” என்றான். என் அப்பா என்னை பார்த்து கொண்டே, “யார் கேட்டாலும் முடியாது தான் என் பதில், ஆன இந்த முடிவு நான் மட்டும் எடுக்க முடியாது உன்னோட அப்பா வும் சேர்ந்துதான் எடுக்கணும் ஜோ, ஆன ஒன்னு மட்டும் சொல்லுறே, உன்னோட அப்பாவோட முடிவும் இதுவாதான் இருக்கும்” என்று சொல்லிவிட்டார்.