என் வீட்டு மாடிக்கு என் கூட படிக்கும் மஞ்சுளா குடி வந்த பிறகு நான் வீட்டு வாசலில் கூட விளையாட முடியாமல் வீட்டுக்கு உள்ளேயே முடங்கி கிடந்தேன். காரணம் என் கிளாஸ்மேட் மஞ்சுளாவின் அம்மா இந்துமதி பானுமதி மிஸ் மேல் உள்ள பயம் தான் காரணம். சின்ன வயதில் இருந்து சயின்ஸ் சரியாக வராததால் அவங்க கிட்டே அடிக்கடி திட்டு,அடி கூட வாங்கி இருக்கிறேன்.
இப்போது பானுமதி டீச்சரே என் வீட்டு மாடியில் குடி வந்ததால் எனக்கு வீட்டை விட்டு வெளியே வந்து அவங்க முன்னால் நடமாட ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் மஞ்சுளா அடிக்கடி கீழே எங்கள் விட்டுக்கு வந்து அவள் அம்மா கொடுத்து அனுப்பியதாக ஏதாவது தின் பண்டங்களை கொடுத்து விட்டு போவாள்.
அப்போது இருவரும் சிரித்து கொள்வோம். அதே போல் என் அம்மா ஏதாவது கொடுக்க மாடியில் மஞ்சுளா வீட்டுக்கு போக சொன்னால் கடுப்பாகி,அட போம்மா,சயின்ஸ் மிஸ் அவங்க,நான் போக மாட்டேன் என்று சொல்லிவிடுவேன். பிறகு அம்மாவே மாடிக்கு போய் பேசி பழகி,இந்துமதி மிஸ்ஸோடு ரொம்பவே குளோசாகி விட்டார்கள்.