கம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்

0
201

கம்ப்யூட்டரின் திறவு கோலாக யு.எஸ்.பி. ட்ரைவ்


உங்கள் கம்ப்யூட்டரைத் திறக்கும் திறவு கோலாக அல்லது மந்திரக் கோலாக, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம். பிரிடேட்டர் (Predator) என அழைக்கப்படும் புரோகிராம் இதற்கு உதவுகிறது. இது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதுவரை நீங்கள் பாஸ்வேர்ட் கொடுப்பதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக, பூட்டியும் திறந்தும் வைத்திடும் பணியை மேற்கொள்பவராக இருந்தால், இந்த வசதியையும் பயன்படுத்திப் பார்க்கலாம். சினிமாவில் வரும் ரகசிய போலீஸ் மாதிரி, யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம்.
இதனை, யு.எஸ்.பி. போர்ட்டில் நுழைத்தால் மட்டுமே, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம். எடுத்துவிட்டால் பயன்படுத்த இயலாது.


இந்த யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் இல்லாமல், யாரேனும் உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முயற்சித்தால், அனுமதி இல்லை (Access Denied) என்ற செய்தியைப் பெறுவார்கள். உங்கள் ப்ளாஷ் ட்ரைவினை, கம்ப்யூட்டரின் திறவு கோலாக மாற்ற, கீழ்க் குறித்துள்ள செயல்முறைகளின்படி செயல்படவும்.


1. முதலில்என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து, Predator என்ற புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும். தொடர்ந்து கம்ப்யூட்டரில் அதனை இன்ஸ்டால் செய்திடவும்.
2.
பிரிடேட்டர் புரோகிராம் இயங்கத் தொடங்கியவுடன், ப்ளாஷ் ட்ரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் இணைக்கவும். இதனால், உங்கள் கம்ப்யூட்டரின் ட்ரைவில் உள்ள எதுவும் மாற்றி அமைக்கப்படமாட்டாது. எனவே பயப்படாமல், இதனைப் பயன்படுத்தவும். இதனை இணைத்தவுடன், டயலாக் பாக்ஸ் ஒன்று கிடைக்கும். பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்குபடி உங்களைக் கேட்கும். ஓகே கொடுத்து தொடரவும்.
3.
இப்போது Preferences என்று ஒரு விண்டோ கிடைக்கும். இதில் உள்ள சில முக்கிய செட்டிங்ஸ் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். “New password” என்ற பீல்டில் பாதுகாப்பான, யாரும் எளிதில் கண்டு கொள்ள முடியாத பாஸ்வேர்ட் ஒன்றைக் கொடுக்கவும். இங்கு கிடைக்கும் Always Required என்ற பாக்ஸில், டிக் அடையாளம் ஏற்படுத்தினால், பிளாஷ் ட்ரைவ் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரைத் திறக்க, உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.
இறுதியாக, Flash Drives என்ற பிரிவில், சரியான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தேர்ந்தெடுக்கவும். இதனை முடித்த பின்னர், “Create key” என்பதில் கிளிக் செய்து, ஓகே அழுத்தி வெளியேறவும்.