சின்ன வீடு….

0
167
அன்று தான் என் சின்ன வீட்டுக்கு ஒரு இரண்டு மூன்று வாரம் கழித்துச் சென்றேன். அங்கே அவள் பாதி ஏக்கத்தோடும் பாதி கோபத்தோடும் காத்துக் கொண்டிருந்தாள். எல்லாம் ஒரு ஆயிரம் ரூபா கொடுத்தால் சரியாகி விடும் என்பதும் எனக்குத் தெரியும். நான் ஒவ்வொரு தடவையும் அவள் வீட்டுக்கு போனதும் அவள் கண் முழுக்க என் பாக்கட்டின் மேல் தான் இருக்கும். ‘என் பொஞ்சாதி வீட்டிலிருந்து பல பேர் வந்திருக்கிறார்கள் அதனால் தான் வரவில்லை” என்று கெஞ்சி சமாளித்தேன். ‘என்ன விட அவங்கதானா முக்கியம்” என்றாள் அவள். ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை. உன்ன பிடிச்சதாலே தானே இங்கே ரெண்டு வருஷமா வாறேன்” என்றேன். ‘பரவாயில்லை. விடுங்க. ஏதாவது சாப்பிட்டீங்களா?” என்று ஆசையோடு கேட்டாள். ‘இல்லடி சரியா பசிக்குது ஏதாவது இருந்தா போடு” என்றேன். ‘வாங்க. வந்து டைனிங் டேபிள்ள உட்காருங்க” என்றுவிட்டு எல்லா சாப்பாட்டையும் மேசையிலே வைத்தாள். பசியோடு இருந்த நான் மளமள என்று சாப்பிடத் தொடங்கினேன். நான் ஆசையோடு சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்த அவள் புடவை முந்தானையை சற்றுக் கீழே பதித்துவிட்டு என் முன்னே வந்து நின்றாள்.