சினிமாவில் இதெல்லாம் சகஜம்

0
238

பளீச், பளீச் என்று எங்கு பார்த்தாலும் கேமரா வெளிச்சம்

நிருபர்கள் அருணை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தார்கள்…

“அந்த படங்கள் உண்மையா சார்”

‘நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்’ என்று அருண் தப்பிக்க பார்த்தான். நிருபர்கள் விடுவதாக தெரியவில்லை.

ஒரு சோடா புட்டி கேட்டான்.

“சார், இதற்கும் அந்த அமைச்சர் சின்னப்பனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?’

‘நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்’ என்று அருண் தப்பிக்க பார்த்தான்.

ஆனால் நிருபர்கள் அவனை விடுவதாக இல்லை, அருண் மிரண்டு போயிருந்தான். ஏனென்றால் அந்த புகைப்படங்கள் எல்லாம் எல்லா பத்திரிகையிலும் வந்து விட்டது. ஆளாளுக்கு என்னென்னவோ எழுதினார்கள். ஒரு பத்திரிகை “அருண் ஹைதராபாத்தில் கும்மாளம்” என்று எல்லா புராணங்ககளையும் எழுதியிருந்தார்கள். அந்த இரு பெண்கள் விபச்சாரிகள் என்றும் எழுதியிருந்தார்கள். இவர்களுக்கு இப்படி எழுத உரிமை கொடுத்தது யார்?

நான் வேகமாக வந்து அவர்களை காரில் ஏற்றிக்கொண்டேன். வீடு திரும்பும் வரை அருண் ஏதும் பேசவேயில்லை. என் பெண்கள் எல்லாரும் மிரண்டு போயிருந்தார்கள். வரும்போதே செல்ஃபோனில் என் சம்பந்தி – அதுதான் கவிதாவின் அப்பா பேசினார். தங்களை போன்றவர்களுக்கும் எங்களை போன்றவர்களுக்கும் இனி மேல் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்னார். இப்போது மட்டும் சம்பந்தம் இருக்கா என்ன? அதை விட பெரிய தமாஷ் – என் பத்திரிகை ஆசிரியர் பேசியதுதான். என்னால் அவர் பத்திரிகைக்கு அவமானமாம். லொல்லுதானே? கட்டு கட்டாக என் வேலை நீக்கம் ஆர்டர் பழுப்பு நிற கவரில் வந்தது. ஆனால் என்னால் இவரை மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது. என்னை நீக்காவிட்டால் பத்திரிகைக்கு கரண்ட் கட்டாகி விடும்.

ஆனால் சின்னப்பன் இப்போது எல்லாருக்கும் ஆப்பு வைத்து விட்டான்! வீட்டுக்கு வந்தேன். வந்தவுடன் போன் செய்து ஆனந்தை வரவழித்தேன்.
அருணை பார்த்து சொன்னேன்.