இது என் சித்தி மகளின் அனுபவம். அவள் பெயர் ப. வயது 20. இனி அவளே சொல்லுவாள். என் அண்ணனின் பெயர் ம. வயது 22. எங்களுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். அண்ணா 3 வருடங்களுக்கு முன் துபாய் போய்விட்டு 10 நாள் முன்புதான் வந்திருந்தான். வரும்போது 2 சூட்கேஸ்கள் கொண்டுவந்து ஒரு சூட்கேஸை, சிறிய ஏணியை போட்டு ஏறி மச்சு மேலே வைத்துவிட்டு ஒன்றை மட்டும் திறந்து அம்மாவுக்கு எனக்கு என பொருட்களைக் கொடுத்தான். மச்சு மேலே இருக்கும் சூட்கேசுக்குள் என்ன இருக்கு என்று அவனிடம் அம்மாவும் கேட்கவில்லை.
எனக்கும் அந்த அளவுக்கு தைரியம் இல்லை. ஆனால் ஆர்வம் இருந்தது. 2 நாள் கழிந்தது. 3ம் நாள் அத்தை வந்திருந்தார்கள். அவர்கள் ஊர் திருவிழாவுக்கு அழைத்தார்கள். ரெண்டு பேரும், சந்தைக்கு போய் விட்டு 2 மணி நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு போனார்கள். அண்ணா, என்னை வீட்டை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு வெளியே போனான். எனக்கு, மச்சு மேலே உள்ள சூட்கேசில் என்ன இருக்கு என்று பார்க்கும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. டேபிளின் மீது கிடந்த அண்ணனின் சாவிக்கொத்தை எடுத்துக் கொண்டு, ஏணியை போட்டு மச்சு மேலே ஏறி விட்டேன்.