ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த நான் மெல்ல அந்த மயக்கம் தெளிந்து லேசாக என் கண்களை மெல்ல திறந்தேன்..
ஆனாலும் இன்னும் இருட்டாக தான் இருந்தது..
ஆம்.. நான் ஒரு இருட்டு அறையில் படுக்க வைக்கப்பட்டு இருந்தேன்..
கண்டிப்பாக அது என்னுடைய அறை அல்ல..
என்னுடைய அறைக்கு பக்கத்தில் ஒரு சின்ன ஒரு ஆள் படுக்கும் அளவிற்கு ஒரு சின்ன தடுப்பு கார்டு போர்டு போட்டு அறை போல் அமைத்து இருப்பார்கள்..
அது எங்க டாய்ஸ் போட்டு வைக்கும் ரூம்.. ஒரே ஒரு சின்ன கட்டில் மெத்தை மட்டும் இருக்கும்.. அது நானும் தம்பி ராஜாவும் சின்ன வயசாக இருந்த போது அந்த ரூமில் டாய்ஸ் வைத்து விளையாடி விட்டு கலைப்பாக அப்படியே தரையில் சில சமயம் தூங்கி விடுவோம்..
தரையில் அப்படி தூங்ககூடாது என்பதற்காக கோபால் அப்பா தான் அங்கு ஒரு சின்ன கட்டில் மெத்தை போட்டு வைத்திருந்தார்..
அங்கு தான் நான் இப்போது படுக்க வைக்கப் பட்டு இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்..