பிள்ளைகளுக்கான உணவுகள், உண்ண வைப்பது எப்படி?

0
201

எதைக் குடுத்தாலும் ஓக் ஓக் என ஓங்காளித்துக் கொண்டிருக்கிறான். என்னத்தைக் கொடுக்கிறது எண்டு விளங்கவில்லை‘ என அப்பா கவலைப் பட்டார்.
கவலைப்பட வைத்தது மெலிந்து ஒல்லித் தேங்காய் போல காய்ந்து கிடந்த அவனது தோற்றம்.
‘நான் சமைக்கிறது ஒண்டுமே இவனுக்குப் பிடிக்கிது இல்லை. ரோல்ஸ் பற்றிஸ் பிட்சா என கடைச் சாப்பாடுதான் பிடிக்கிறது’ என்றாள் அம்மா கவலையுடன். அவனது தோற்றமும் கவலைப்பட வைத்தது.
பெல்ட்டுக்கு மேலாகப் பிதுங்கித் தொங்கிக் கொண்டிருந்த வயிறும், கழுத்தில் கரும் பட்டை போல பரவியிருந்த அக்கன்தோசிஸ் நயகரான்ஸ்சும் இவனுக்கு எப்ப நீரிழிவு வரப் போகிறதோ என என்னைக் கவலைப்பட வைத்தது.

சில நடைமுறைப் பிரச்சனைகள்

  • பிள்ளைகள் சாப்பிடுகிறார்கள் இல்லை என்பதே பல பெற்றோர்களின் ஆதங்கம். 
  • சிரமம்பட்டுச் சமைத்தாலும் பிள்ளைகளுக்கு அந்தச் சாப்பாடுகள் பிடிப்பதில்லை என்பது ஒரு காரணம். 
  • பெற்றோர்கள் இருவரும் வேலைக்குசெல்வதால் ஆன முறையில் சமைத்துக் கொடுக்க முடிவதில்லை என்பது மற்றொரு பிரச்சனை. 
  • மாறாக சில பிள்ளைகள் ஆரோக்கியமற்ற குப்பை உணவுகளே கதியாகக் கிடக்கிறார்கள்.
மாற்றும் வழி என்ன?