ஒரு பெரிய கோபுரம், பார்க்கும் எவருக்கும் ஆச்சர்யத்தை உருவாக்கக் கூடியது. ஆனால், அதை எப்படிக் கட்டி இருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள். முதல் நாள் கட்டுமான வேலையின் முதல் வேலை என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். ஒரு சின்னக் கல்லை அந்த இடத்தில் எடுத்து வைத்ததுதான் முதல் வேலையாக இருந்திருக்கும். இப்படி ஒவ்வொரு கல்லும் தொடர்ந்து அடுக்கப்பட்டதன் விளைவுதான் பெரிய கோபுரம். ஆரோக்கியமும் அப்படித்தான். ஒரு சின்ன செயல். அதைத் தொடர்ந்து செய்தால், கிடைக்கும் பலன் அபாரம். அப்படிப்பட்ட சின்ன விஷயங்களை & சின்னச் சின்ன செயல்களை & தொடர்ந்து செய்தால் அவற்றால் ஏற்படும் பிரம்மாண்டமான பலன்களை இதழ்தோறும் இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.
வெந்தயம்
இது உணவுப் பொருள் மட்டும் அல்ல. நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தில், ஓர் அற்புதமான கை மருந்து இது. வெந்தயம் எவ்வளவோ வகைகளில் மருந்தாகப்
பயன்படுத்தப்படுகிறது என்றாலும், வெந்தயத்தை வைத்து மிக எளிமையாக ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். அது… வெந்தயத் தண்ணீர் தயாரித்துக் குடிப்பது.