வட்டி – ஒரு சமுதாயக் கேடு!

0
304

வட்டி – ஒரு சமுதாயக் கேடு!

 “(அதிகமானோர்) வட்டியை உண்ணக் கூடிய அல்லது அதனுடை புழுதியாவது படியக் கூடிய ஒரு காலம் மக்கள் மீது வரும்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவப்பது அபூ ஹுரைர (ரலி) அவர்கள். (நஸாயீ)
இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்நபி மொழி நூற்று நூறு பொருந்தி வருவதை தெளிவாகவே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. வட்டியின் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது என்று முடிவு எடுத்து செயல் பட்டு வரும் பல சகோதரர்கள் ஏதேனும் ஒரு நெருக்கடியை சந்திக்கும் போது, இந்தத் தீமையில் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.
வட்டி என்பது பாவம் தவறு என்று அணைவர்களும் அறிந்திருந்தும் நடப்பது என்ன?

  • எனது மனசாட்சியின்படி வட்டியும் ஒரு தொழில் தான். (வீட்டு வாடகை, கார் வாடகை போன்று இதுவும் ஒன்று தான்).
  • நேரடியாக வட்டி வாங்குவது ஹராம். ஆனால் பேங்க், எல் ஐ சி, வீட்டு லோன், இன்ஸ்டால்மெண்ட் வட்டி போன்றன இன்றைய காலத்தில் தவிர்க்க இயலாதது.
  • எங்களுக்கு யாரும் கடன் தருவது இல்லையே! வட்டிக்குத் தானே பணம் பெற வேண்டும்.
  • ஒத்தி என்பதும் வியாபாரம் தானே! வாழையடி வாழையாக எங்களது முன்னோர்கள் செய்து வந்துள்ளார்களே!
  • கடனாக ஒரு தொகையை விவசாயிடம் கொடுத்து விட்டு வருடா வருடம் இத்தனை மூட்டை நெல் வாங்குவதும் ஒரு வகை வியாபாரம் தானே!
  • வியாபாரிகளிடையே நடைபெறும் ஏலச் சீட்டு இதுவும் எங்களுக்குள் உள்ள ஒரு உதவி முறை தானே!