அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள்

0
171

உங்களது குழுந்தை தலைவலி என அடிக்கடி சொல்கிறதா. அல்லது தலைவலியால் அவதிப்படுகிறதாக நீங்கள் உணர்கிறீர்களா? பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் தலைவலி பற்றிய அதீத கற்பனைகளுடன் பயந்தடித்து ஓடி வருவது வழக்கம். அதேபோல வயிற்று வலி, கால் வலி என வருவதும் உண்டு. இவை பெரும்பாலும் ஆபத்தான நோய்களால் வருவதில்லை.

சின்ன சின்னப் பிரச்சனைகளே பிள்ளைகளுக்கு இத்தகைய அறிகுறிகளை ஏற்படுத்துவதுண்டு. 'சாப்பிடு சாப்பிடு' என நச்சரிப்பதாலேயே பல பிள்ளைகள் வயிற்று வலி என்று சொல்லித் தப்பிக்க முயல்கின்றன.

'படி படி' என விடாப்பிடியாக மேசையில் உட்கார வைப்பதாலும் பிள்ளைகளுக்கு தலைவலி ஏற்பட்டுவிடலாம். தலைவலியைப்; பொறுத்த வரையில், பொதுவாக பெரியவர்களை விட குறைவாகவே குழந்தைகளுக்கு வருகிறது. அடிக்கடி வருவதும் இல்லை. வந்தாலும் கடுமையாக இருப்பதில்லை.

தலைவலி வந்தாலும் பெரும்பாலும் மந்தமானதாகவே இருக்கும். இருந்தபோதும் சில குழந்தைகளுக்கு கடுமையான துடிக்க வைக்கும் தலைவலி வரவும் கூடும்.

தலைவலி இருக்கிறதா என அடிக்கடி பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாலும் காரணமின்றியும் வந்துவிடும். கேட்டு அறிவதைவிட குழந்தைகளின் நடத்தையை அவதானித்து அவர்களுக்கு நோயிருக்கிறதா என்பதை அறிபவர்களே சிறந்த பெற்றோராக இருப்பார்கள்.