எப்படிப்பட்ட வலிமையான மனிதரையும், மனச்சோர்வு எளிதில் வீழ்த்திவிடும். ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனாலும் மனச்சோர்வுடன் இருக்கும் போது நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான காரியங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாளர்கள், அண்டைவீட்டார், கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு கடவுள் என நம்முடைய சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளும் பலர், நம் உலகத்தில் இருக்கிறார்கள்.
மனச்சோர்விலேயே உழன்று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர்வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம். இதனால் நம்மை போன்ற பிற மனிதர்களுடைய வாழ்க்கையும் இனிமையாக இருக்க வகை செய்யலாம். இத்தகைய மனச்சோர்வில் இருந்து வெளிவருவது எப்படி என்பது குறித்த சில முக்கியமான குறிப்புகளை இங்கே கொடுத்து இருக்கிறோம். நீங்களோ அல்லது உங்களுக்கு அறிமுகமானவர்களோ மனச்சோர்வில் இருந்தால், இவற்றை படிக்குமாறு கூறி, வாழ்வை இனிமையாக்குங்கள்.
உடற்பயிற்சி செய்வது
மன அழுத்தத்தை நீக்க சிறந்த வழி உடற்பயிற்சி. இது நல்ல உடல் அமைப்பை கொடுப்பது மட்டுமின்றி, நேரிடையான சிந்தனைகளையும் அதிகரிக்கின்றது. உணர்வுகளை சீர்படுத்துகின்ற செரோடொனின் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் ஆகியவற்றை சுரக்க உடற்பயிற்சி உதவுகின்றது. அதோடு மனச்சோர்வு அளிக்கும் சிந்தனைகளையும் ஒதுக்கிவிடுகின்றது.