என் நண்பன் செய்த துரோகம், என் மனைவி செய்த தியாகம்
நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகின்றது.
எனது நெருங்கிய உயிர் நண்பன் ஒருவனின் தங்கை திருமண செலவுகளுக்காக, ஊரில் உள்ள அவன் இடத்தை விற்பதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகவும், ஆனால் அதற்க்கு சில மாதங்கள் ஆகலாம் என்பதனால், பணம் அவசர தேவை என்று கூறியதால், என் வீட்டை வங்கியில் அடமானம் வைத்து பணம் வாங்கி தர கூறினான்.
அதற்க்கு எனக்கு கூடுதலாக மேல் வட்டியும் தருவதாக ஆசை காட்டினான். கூடுதல் வட்டிக்கு ஆசைப்பட்டு எனது வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கி அவனுக்கு தந்து விட்டேன்.
அதற்க்கு ஆதாரமாக என்னிடம் அந்த நிலத்தின் பத்திரங்களை தந்துவிட்டான். நான் அவனிடம் சில வேற்று பத்திர பேப்பர்களில் கையெழுத்து வாங்கிகொண்டேன். ஆனால் அவன் விற்பதற்கு முயற்சியே எடுக்கவில்லை.
அவன் உரிய காலத்தில் வட்டி மற்றும் அசல் கட்ட தவறியதால், வங்கியிடம் இருந்து எனக்கு நோட்டிஸ் வந்து விட்டது.
நான் அவனிடம் போய் கேட்டபொழுது ஊரில் உள்ள அவன் இடத்தை விற்றதும் பணம் தந்துவிடுவதாகவும், அதற்க்கு முன்பு எதுவும் செய்ய இயலாது என படு கூலாக கூறினான்.
எனது நெருக்கடியை தெரிந்துகொண்டும் அவன் இப்படி அலட்சியமாக கூறியது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் கொடுத்த நில பத்திரங்களை வைத்து அவன் மீது வழக்கு போட்டுவிட்டேன்.