நான் பேப்பர்ல போட்டோ பாத்தேன் முத்தையா ;அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் எப்பயும் போல பாவம் கல்யாணம் பண்ண போற பொண்ணுன்னு உன் இரக்க குணம் வர கூடாது .உன் நோக்கம் பழி வாங்குறது மட்டும் தான் அதுக்கு பலியா நீ என்னைய கூட கொடுக்கலாம் ,அதுனால அவள முடிச்சுட்டு வா
நான் பாலக்காட்டுக்கு போனேன் அங்க கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு நாளைக்கு முன்னாடி மண்டபத்துக்கு போனேன் அங்க இருந்த ஒரு கேட்டரிங் வேலைக்காரன அடிச்சு மயக்கமாக்கி என் கார் டிக்கில போட்டுட்டு அவன் டிரஸ் எடுத்து நான் போட்டு கிட்டேன் அப்புறம் அந்த மண்டபத்துல நான் அந்த கமிசனர் ஆண்டனிய பாத்தேன் எனக்கு அந்த பாட அங்கேயே கொல்லனும் போல இருந்துச்சு ஆனா முத்தையா சொன்னத ஞாபகத்துல வச்சு கிட்டேன் என் திட்டத்த மட்டும் மனசுல வச்சு கிட்டேன்
அங்க ஆண்டனி மக ரீனாவுக்கும் பெரிய தொழில் அதிபர் ஜோசெப்க்கும் நிச்சயாதர்த்தம் தட புடலா நடந்துச்சு
ஆன்டணி குடும்பத்தோடஆடி பாடி சந்தோசமா இருந்தான்
என் குடும்பத்தைய சீர் அழிச்சுட்டு ஆண்டனி சந்தோசமா இருக்கிறத பாக்க எரிச்சலா இருந்துச்சு நான் அங்க பரிமாற வேலை பாத்து கிட்டு இருந்தேன்