சினிக்கூத்து – 03

0
131

துணைநடிகை கல்யாணி

மொட்டைமாடியின் இறுதிப்படியை அடைந்ததேன். அப்போது
‘என்னை ஏமாத்த மாட்டீங்களே’ என்ற ஒரு பெண்குரல் கேட்டது. அந்தக்குரலில் ஒரு விதமான நம்பிக்கையின்மை தெரிந்தது. யாரோ மொட்டைமாடியில் இருக்கின்றனர் என்பது புரிந்தது. நிச்சயமாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இருக்க வேண்டும். இல்லை என்றால் இப்படியான வசனம் வர முடியாது.

‘என்னை நம்பு கல்யாணி. நான் மற்றவங்க மாதிரி இல்லை. நிச்சயமாக உன்னை ஏமாத்த மாட்டேன்’ஆண்குரல் பதிலளித்தது.

‘சீ கையை எடுங்க. நீங்க ரொம்ப மோசம்’ பெண்குரல் சிணுங்கியது.

‘ஏய். என்ன் இப்படிச் சலிச்சுக்கிறாய். இவ்வளவு தூரம் வந்துவிட்டு இப்போ அங்க தொடாதே இங்கே தொடாதேன்னு சொல்லிட்டு இருக்கின்றாய்’ அதே ஆண்குரல்.

‘ஐயே… அங்கை எல்லாம் தொடாதீங்க……. கூச்சமாக இருக்கு….. பிளீஸ்… கையை எடுங்க ….ம்..ம்…’அதுக்கு மேல் பெண்ணின் சத்தத்தையே காணவில்லை. என்ன நடக்குது அங்கே என்று எட்டிப்பார்த்தேன்.

அங்கே என்சீனியர் உதவி இயக்குனரான கதிர் தனது வாயால் ஒரு பெண்ணின் வாயை மூடி இருந்தான். பெண் குரல் தொடர்ந்து ஒலிக்காததுக்கு காரணம் புரிந்தது. மொட்டை மாடியின் மங்கலான வெளிச்சம் இருந்தது. நான் இருட்டில் இருந்தேன். அதனால் அவர்களது அசைவு எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அவர்களால் என்னைப்பார்க்க முடியாது. வாழ்க்கையில் பணக்காரர்களுக்கு எப்படி ஏழைஜாதியினர் தெரிவதில்லையோ அது போலத்தான் இதுவும். இருட்டில் இருப்பவர்களுக்கு வெளிச்சத்தில் இருப்பவர்களைத் தெரியும். வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு இருட்டில் இருப்பவர்களைத் தெரிவதில்லை. அறிவியல் கூட சில வேளைகளில் வாழ்க்கையுடன் ஒத்துப்போகின்றது பாருங்கள்.