சினிக்கூத்து – 02

0
124
வனஜாவின் வண்ணக்கோலங்கள்.

அன்று இரவு மனி பதினொன்று அடித்தது. ஊட்டிக்குளிரில் அனைவரும் உறங்கப்போயிருப்பார்கள். ஓட்டல் ரூம்களில் என் யூனிட் அதிமேதாவிகளும் தூங்கியிருப்பார்கள் என நினைத்தேன். நானோ ஓட்டலின் வேக்கில்பார்க்கில் காருக்குள் சுருண்டேன். இன்ரு நானும் ஒரு இயக்குனர் ஆகிவிட்டேன். ஏதோ ஒன்றைத் தொட்டுவிட்ட மனநிறைவுடன் சினிமாக் கனவு நிஜமாகிவிட்டது என்ற சந்தோசத்தில் கண்ணயர்ந்த நேரம் கதவில் கார்க்கதவின் கண்ணாடியில் யாரோ தட்டினார்கள். குளிரின் காரணமாக கண்ணாடியின் உள்ளே படித்திருந்த புகாரை துடைத்து விட்டு யாரென்று பார்த்தேன். அட நம்ம நடராஜன் சார். கதவைத் திறந்தேன்.

‘என்ன சார்! இந்த நேரத்தில வந்திருக்கீங்க. எங்காவது போகனுமா’

‘இல்லைப்பா, நீமட்டும்தான் போகனும்’

சொன்ன நடராஜன் சார் முகத்தில் ஏதோ ஒரு வேதனையின் சாயல்.

‘எங்கே சார்’

‘நீ தங்கியிருக்கும் லாட்ஜுக்கு போகனும். அங்கே வனஜான்னு ஒரு துணை நடிகை இருக்கா. அவளை இங்கே கூட்டிட்டு வரணும்’

ஒன்னுமே புரியலை எனக்கு. அவளை ஏன் இந்த நேரத்தில் இங்கே கூட்டிக்கொண்டு வரனும். அவளுக்கு இங்கே என்ன வேலை. அங்கே இருப்பது எல்லாம் டான்ஸ்ர்ஸ என்றுதானே சொன்னார்கள். இவ்வாறு பலதரப்பட்ட கேள்விகளை எனக்குள் கேட்டபடி சாரின் முகத்தைப் பார்த்தேன்.