சினிக்கூத்து – 04

0
149
டைரக்டர் பொண்டாட்டி பொன்னுத்தாயி

ஊட்டியிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தோம். இரண்டு நாட்கள் ஓய்வின்பின்னர் அடுத்தகட்டப்படப்பிடிப்புக்காக சென்னையில் ரெடியானோம். அப்போது இடிமாதிரி ஒருசெய்தி தாக்கியது. படத்தின் புரடியூசர் விபத்தில் இறந்து விட்டார். படம் அத்துடன் நின்றது. சினிமாவில் முக்கியமான ஒன்று சென்டிமென்ட். ஆம். அதே சென்டிமென்ட் எனது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. நான் வந்து சேர்ந்த ராசியினாலேயே இப்படி ஆச்சு என்று டைரக்டர் நம்பினார். இல்லை.. சில நல்ல மனிதர்களால் நம்பவைக்கப்பட்டார். விரட்டபடாத குறையாக உதவியாளன் பணியிலிருந்து நீக்கப்பட்டேன்.

அனால் நானோ சினிமாவை விடுவதாக இல்லை. பல டைரக்டரிடம் உதவியாளனாகச் சேருவதுக்கு முயன்றேன். அவர்கள் வீடு வீடாக அலைந்தேன். அலுவலகங்களுக்குச் சென்றேன். அங்கெல்லாம் நான் பஸ்ஸில் போனால் எனக்கு முன்னாடி எனது ராசி மேட்டர் ஏரோபிளேனில் போனது. அதனால் யாரும் என்னை உதவியாளனாகச் சேர்க்கவில்லை. இப்படி ஒருவருட் காலம் ஓடியது. அப்போது எனக்கு உதவிசெய்த இருவர் இயக்குனர் ஷங்கர் சாரும் கமல்சாருமே. இந்தியன் படத்தில் கமல்சார் பதவிக்காக ஆபீசர் பொண்டாட்டிக்கும் மகளுக்கும் என்னன்னமோ செய்வார். நானும் அதே டெக்னிக்கை பிடித்தேன்.