கங்கா யமுனா சரஸ்வதி – 10

0
153
திலிபன்

கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று ஐயர் சத்தம் கொடுக்க.. நான் சரியாக ஸ்டூல் மேல் நின்று தாலி கட்டும் காட்சியை படம் எடுக்க கேமராவை போக்கஸ் செய்தேன்..

அப்போது…

நிறுத்துங்க.. என்று சத்தம் கேட்க.. அனைவரும் அதிர்ந்தனர்..

எங்கே இருந்துடா நிறுத்துங்கனு சத்தம் வருது பார்த்தா.. விஷ்ணு பக்கத்து மேடையில வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த ராஜா தான் தன் வீடியோகேமை வீசி எறிந்து விட்டு.. எழுந்து நின்று கத்திக் கொண்டிருந்தான்..

அட பாவி.. இந்த பொடிப்பயலா இப்படி கல்யாணத்தை நிறுத்துனது.. னு எல்லாரும் ஆச்சரியமா பார்த்தாங்க..

கோபால் அவன் அருகே ஓடி வந்தார்..

டேய் ராஜா.. ராஜா.. என்ன இது விளையாட்டு.. அண்ணன் கல்யாணத்த தம்பி நிறுத்துறதா.. உன் குறும்பு தனத்துக்கு ஒரு எல்லை இல்லை.. என்று கொஞ்சம் கோபம் வந்தவராக அவனை பிடித்து உலுக்கினார்..

எனக்கு தான் முதல்ல கல்யாணம் நடக்கனும்.. அதுக்கு அப்புறம் தான் விஷ்ணு அண்ணனுக்கு.. என்று ராஜா அடம்பிடிக்க ஆரம்பித்தான்..