அந்த அதிகாலை குளிரில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனை வந்து அடைந்த கோயம்புத்தூர் எக்ஸ்பிரசில் இருந்து இறங்கினேன்..
மக்கள் வெள்ளத்தை கிழித்துக் கொண்டு ரயில் நிலையத்தின் வாயிலுக்கு வந்தேன்..
வா சார்.. வா சார்.. உனக்காக தான் காத்துகிட்டு இருக்கேன்.. வந்து வட்டில குந்து சார்.. என்று ஒரு காக்கி சட்டை அவன் கையில் இருந்த பேக்கை பிடுங்காத குறையாக அழைத்தான்…
டேய் முத்து.. சாரு என்னோட மாமுல் சவாரி.. ஒழுங்கா ஒதுங்கிக்கோ.. என்று இன்னொரு காக்கி சட்டை வந்தான்..
இரு ஆட்டோகாரர்களும் என் பெட்டியை பிடித்து இழுக்க…
யோவ்.. நான் கோவைல இருந்து இப்ப தாங்க முத தபா சென்னைக்கு வர்றேன்.. என்று சிங்காரவேலன் கமல் ஸ்டைலில் நான் சொன்னேன்..
ஐயோ.. கருவாடு பார்ட்டியா.. என்று இரண்டாவது வந்தவன் ஒதுங்கினான்..
முத்து நீயே சார இட்டுகினு போ.. என்று சொல்லிவிட்டு அவன் சென்று விட்டான்..
முத்துவின் ஆட்டோவில் ஏறினேன்..
மெய்யாலுமா கருவாட்டு கூடை கொண்டு வந்தியா சார்.. என்றான் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தபடி