பாண்டிய நாட்டுப் பசுங்கிளி – பாகம் 5

0
137

இடம்: அரசவை உப்பரிகை.

“மன்னா சொல்கிறேன் என்று தவறாக நினைக்கக் கூடாது! உண்மையாகவே அந்தச் சுவர்ணவல்லிஉங்களைக்
காதலிப்பதாகக் கூறினாரா…? இல்லை அவளின் ஓழில் மயங்கி நீங்கள் அவளை நிரந்தரமாகவைத்துக் கொள்ளத் திட்டமா?…” அமுக்கினத்தேவர் மன்னனின் மெதுவான சிந்தனை கலந்தநடைக்கு ஈடாக மெதுவாக நடந்தபடி வினவினார். நடந்துகொண்டிருந்த மன்னன் நின்றுகொண்டார். “என்ன வார்த்தை சொன்னீர்கள் அமுக்கினத்தேவரே…! இந்த ஆனந்த பாண்டியன் எந்தஅதிசயக்கூதிக்கும் மயங்கியதாகச் சரித்திரம் இல்லை. அவளாகத்தான் இந்த முடிவில்இருக்கிறாளாம்” மன்னன் வார்த்தைகளில் கொஞ்சம் கடுப்பு தெரியவே அமுக்கினத்தேவர்இடைமறித்து, “மன்னிக்கவேண்டும் உங்களிடம் உண்மையைத் தெரிந்து கொள்ளவே கேட்டேன்.அமைச்சர் அடங்காமுடியைப் பொருத்தவரை அரசுக்குத் துரோகம் இழைக்க மாட்டார்! ஆனால்….”மன்னன்
இடைமறித்தார், “என்ன ஆனால்…., அடங்காமுடி கோபத்தால் தவறான நடவடிக்கைகளில்இறங்குவார் என நினைக்கிறீரா…”. “இல்லை மன்னா… எதற்கும் அந்தச் சுவர்ணவல்லி மீதும் ஒருசந்தேகப் பார்வை வைத்திருங்கள்” அமுக்கினத்தேவர் சொன்னதும் அரசருக்குக் கொஞ்சம்பொறிதட்டியது. ஆனால் அமுக்கினத்தேவர்
வார்த்தைகளில் முற்றிலும் உண்மை இருந்தது அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

காட்சி 8:
இடம்: அந்தப்புறக் படுக்கையறை எண் 7