எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல்

0
107

நான் சித்தார்த்.. சென்னையில் எனது அப்பாவின் ஆடிட்டர் தொழிலில் அவருக்கு பார்ட்னராக இருக்கிறேன்.. வயது 44.. காதோரம் நரை ஆரம்பமாகிவிட்டது.. இப்போது என் மகளும் சி.ஏ படித்துக் கொண்டிருக்கிறாள். என் மனைவி மதுமிதா .. வயது 47 ஆம் என்னைவிட 3 வயது மூத்தவள்… எங்கள் திருமனம் காதல் திருமனம்.எனது கல்லூரிக் காதலை உங்களோடுப் பகிர்ந்துக் கொள்ள இருக்கிறேன்..

நான் பி.காம் படித்தது கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரில் 1980 -83 பேட்ச். அப்போது எங்கள் காலேஜில் பி.காமில் வெறும் மாணவர்கள் மட்டும்தான்.. மீதி எல்லாப் பிரிவுகளிலும் ஆண்,பெண் இரு பாலாரும் படித்தார்கள்.

எங்கள் காலேஜ் மற்றக் கல்லூரிகளைப் போல இல்லாது ஒரு பூங்காவனம் போல இருக்கும்… தினமும் எங்கோ ஒரு பார்க்கிற்கு நன்பர்களுடன் சென்று மகிழந்து வந்ததுப் போலத் தான் இருந்தது.. இந்த அனுபவத்தை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரில் படித்தவர்கள் மட்டுமே உனர முடியும்..

எங்கள் கல்லூரி காலை 8.15க்கு ஆரம்பித்து 12.45 க்கு முடியும். அவ்வளவுதான்.. தினம் மதிய சாப்பாடு முடிந்ததும் ஊர் சுற்றக் கிளம்பிவிடுவோம்..இரவு 10 மணிக்குதான் பெரும்பாலும் ஹாஸ்டல் திரும்புவோம்.

காலையில் சூரியன் உதிக்க மறந்தாலும் 7.45 மணிக்கு எங்கள் காலேஜ் வாசல் வந்துவிடுவோம். கேட்டிலிருந்து சுமார் 100 மீட்டருக்கு ஒரு நேர் ரோடு செல்லும் அதன் முடிவில் கல்லூரியின் மெயின் கட்டிடம் இருக்கும். அந்த ரோட்டின் இரு பக்கமும் 3 அடி உயரத்தில் சுவர் (பேரப்பட்) இருக்கும். அதுதான் எங்கள் மார்னிங் ஸ்பாட். கல்லூரிக்குள் வரும் அத்தனை டே – ஸ்காலர் பெண்களையும் அட்டென்டன்ஸ் எடுத்து விட்டு பிறகுதான் எங்கள் வகுப்பிற்கு செல்வோம். பெரும்பாலும் எங்கள் ப்ர·பஸர்கள் வகுப்பில் கவனிக்க விரும்பாதவர்கள் வருகைப் பதிவு செய்துவிட்டு வெளியே சென்றுவிடலாம் என்பார்கள்.. அவர்கள் சொல்பேச்சு மீறாத நாங்களும் வெளியேறி கேன்டீன் சென்று விடுவோம்.

கேன்டீனில் டீ, எக் போன்டா வாங்கிக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டே 1/2 மணிநேரம் ஓடும். அதன் பின் பக்கத்தில் இருக்கும் ஆடிட்டோரியம் படிக்கட்டுக்கள் தான் எங்கள் இடம். நல்ல வேப்ப மரக் காற்று.. அரட்டை சிகரெட் என்று 3 மணிநேரம் ஓடும். 12 மணிக்குமேல் ஹாஸ்டலுக்குப் போய் சாப்பாடு.. அப்புறம் டவுனுக்கு ஊர் சுற்ற.. இதுதான் எங்கள் எல்லோருக்கும் அன்றாட வாழ்க்கை..

2ஆம் ஆண்டு முடிந்து 3ஆம் ஆண்டு ஆரம்பமானது. அன்று 1982 ஜூன் 8ஆம் தேதி புதன் கிழமை அன்றுதான் கல்லூரிக்கு முதல் நாள்.. காலை 7.30க்கெல்லாம் கேட்டில் ஆஜரானோம். அன்று புது·பிகர்ஸ் நிறைய வரும் ஒன்னையும் மிஸ் பன்னாம பாக்கனும் என்றுதான்.