மதன மோகினி – திகில் காம கதை

0
226

அந்த நள்ளிரவில், பெங்களூர் டூ ஹைதராபாத் ஹைவேயில் நான் தனியாக நின்றிருந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கும்மிருட்டு. மேலே இருந்த பவுர்ணமி நிலவின் மங்கலான வெளிச்சம் மட்டும் விதிவிலக்கு.
அவ்வப்போது வாகனங்கள் ஒளியை தெளித்தவாறு “க்யீயீயீங்ங்..” என்ற பெரும் சப்தத்துடன் அதிவேகத்தில் வந்து, பின் அதே வேகத்தில் பார்வையில் இருந்து மறைந்தன.
தவளைகள் என்று நினைக்கிறேன், “கிர்ர்ர்ர்க்க்க்.. கிர்ர்ர்ர்க்க்க்..” என்று கூச்சலிட்டுக்கொண்டே இருந்தன. முதுகுத்தண்டில் ஐஸ் வைத்தமாதிரி அந்த சூழ்நிலை எனக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
பக்கவாட்டில் திரும்பி பார்த்தேன். நான் வந்த கார் மரத்தில் மோதி நொறுங்கியிருப்பது நிலவு வெளிச்சத்தில் பளிச்சென்று தெரிந்தது. எனக்கு அந்த கார் மிகவும் பிடிக்கும். பிசினஸ் ஆரம்பித்து, என்னுடைய உழைப்பில் நான் வாங்கிய முதல் கார் அது. அதே பிசினஸ் விஷயமாக ஹைதராபாத் செல்லும் வழியில் இப்படி அந்த காரின் ஆயுள்காலம் முடிந்து போனது வருத்தமான விஷயம்.
மிகவும் ஒரு கஷ்டமான கோணத்தில் கார் அந்த மரத்தின் கிளைகளோடு மோதி சிக்கியிருந்தது. நான் கொண்டுவந்த செல்போன் கூட எதோ ஒரு இடுக்குக்குள்ளே சிக்கி தொலைந்து போயிருந்தது. என்னுடைய நிலையை மற்றவர்களுக்கு சொல்ல எந்த வழியும் இல்லாமல் தனியாக நின்றிருந்தேன். வாழ்க்கையில் முதன் முறையாக மிகவும் ஹெல்ப்லெஸ்ஸாக உணர்ந்தேன்.
உதவி கேட்பதற்காக சாலையில் போய் வந்து கொண்டிருந்த வாகனங்களின் குறுக்கே கையை நீட்டி மறித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் யாருக்குமே என் மீது இரக்கம் வரவில்லை. நான் ஒருவன் சாலையில் நின்று கொண்டிருப்பதாகவே யாரும் காட்டிக் கொள்ளவில்லை. வேகத்தை சிறிதும் குறைக்காமல் “சர்ர்.. சர்ர்.. சர்ர்..” என்று போய்க்கொண்டே இருந்தார்கள்.
எனக்கு எரிச்சலாக வந்தது. மனிதர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை குறைந்து போயிருப்பது தெளிவாக புரிந்தது.
ஒரு அரை மணி நேரம். நான் கையை ஆட்டி ஆட்டி களைத்துப் போனேன். அனைவரும் என் முகத்தில் பளீர் பளீர் என்று வெளிச்சத்தை தெளித்துவிட்டு, பட்டென்று கடந்து சென்றார்களே ஒழிய, ஒருவர் கூட என் மேல் பரிதாபப்பட்டு வண்டியை நிறுத்தவில்லை.
நொந்து போனேன். சாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த மைல்கல் மீது பைத்தியம் பிடித்த மாதிரி அமர்ந்திருந்தேன். கழுத்து சுளுக்கிக்கொண்ட மாதிரி கடுமையாக வலித்தது. கைகளால் அழுத்தி பிடித்துக் கொண்டேன். அழவேண்டும் போல இருந்தது. அப்போதுதான் தூரத்தில் தெரிந்த அந்த வீட்டை கவனித்தேன்.
வீடு என்று கூட சொல்ல முடியாது. பங்களா என்று சொல்ல வேண்டும். இல்லை.. இல்லை.. அரண்மனை என்று சொல்லலாம்.. அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக, பழங்கால ஸ்டைலில் கட்டியிருந்தார்கள். உள்ளே இருந்து மஞ்சள் நிறத்தில் மங்கலாக வெளிச்சம் வெளியே கசிந்து கொண்டிருந்தது. உடனே எனக்கு பட்டென்று அந்த யோசனை தோன்றியது. அங்கு சென்று உதவி கேட்டால் என்ன..? ஒருவேளை அந்த வீட்டில் டெலிபோன் இருந்தால், யாருக்காவது போன் செய்து உதவி கேட்கலாமே..?
நான் பட்டென்று மைல் கல்லில் இருந்து குதித்து இறங்கினேன். அந்த பங்களா இருந்த திசையை நோக்கி இருளில் நடக்க ஆரம்பித்தேன். அந்த வீட்டிற்கு செல்லும் பாதை சரியாக இல்லை. இல்லையென்றால் நான் சரியான பாதையில் செல்லவில்லை எனலாம்.
வழிநெடுக புதர் மண்டிக்கிடந்தது. காட்டு முற்செடிகளும், கற்றாழை செடிகளும் எக்கச்சக்கமாய் வளர்ந்து, நிறைந்து கிடந்தன. வினோதமான கற்றாழை வாசனை, அந்த சூழ்நிலைக்கு ஒரு வித அமானுஷ்ய எபெக்டை கொடுத்தது. நான் முதுகுத்தண்டில் ஒரு வித பய சிலிர்ப்புடனே நடையை போட்டேன்.
மெல்ல மெல்ல முன்னேறினேன். முற்செடிகளில் மிதித்து விடாதவாறு, கவனமாக காலடிகளை எடுத்து வைத்து நகர்ந்தேன். சுற்றிலும் நிசப்தம். காய்ந்த சருகுகளில் நான் காலெடுத்து வைக்கும் “சர்ர்ரக்க்க்க்.. சர்ர்ரக்க்க்க்.. சர்ர்ரக்க்க்க்..” ஒலியையும், காட்டுத்தவளைகள் எழுப்பிய “கிர்ர்ர்ர்க்க்க்.. கிர்ர்ர்ர்க்க்க்.. கிர்ர்ர்ர்க்க்க்..” ஒலியையும் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை.
நிதானமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்த என் முன்னால் திடீரென்று அந்த ஆள் வந்து நின்றான். எங்கிருந்துதான் வந்தான் என்றே தெரியாத மாதிரி, அந்த ஆள் படக்கென்று வந்து நிற்க, நான் அப்படியே பதறிப் போனேன்.
வயதான ஆள். ஒரு ஐம்பது, அறுபது வயது இருக்கும். தலை, மீசை, தாடி எல்லாம் தும்பைப்பூ மாதிரி நரைத்துப் போயிருந்தன. அவனுடைய முகத்தில் ஒருவித அசாத்தியமான அமைதி. வாயில் பீடி புகைந்து கொண்டிருந்தது. துண்டோ, போர்வையோ போற்றி முக்காடு போட்டிருந்தான்.
பீடி வெளிச்சத்தில் அவனுடைய சலனமில்லாத, குத்திட்ட கண்கள் என் பார்வையில் பட்டபோது, எனக்கு உடலெல்லாம், “ஜிலீர்ர்ர்..” என்று ஒரு சிலிர்ப்பு..!! நடுங்கினேன்.
“இந்த நேரத்துல எங்க தம்பி போறீங்க..?” அந்த ஆள் ஒரு எந்திரம் போல உணர்ச்சியே இல்லாமல் கேட்டான்.
எனக்கு உடனே பேச்சு வரவில்லை. வாய் குழறியது. தட்டுத் தடுமாறி சொன்னேன்.