உலகத்தில் மிகவும் கடினமான காரியம் எது தெரியுமா ?! நான் சொல்கிறேன். ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான்.
ஒரு சோம்பேறித்தனமான சனிக்கிழமை மத்தியான வேளையில் நான் இப்படிப்பட்ட கடினமான வேலை செய்து கொண்டிருந்த போது அந்த தொலைபேசி என்னை அழைத்தது. நான் எடுத்து “ஹலோ” என்றேன். பதில் வந்தது. இன்பமாக அதிர்ந்தேன். எதிர் முனையில் ‘விஜி’ !!
“ஏ! விஜி !! எப்போ ஊரில் இருந்து வந்தெ ?!”
“இன்னைக்கு காலையில் தான்” – விஜியிடம் இருந்து பதில் வந்தது.
“உன்ன பாத்து ரொம்ப நாள் ஆச்சு விஜி, நீ இங்க வீட்டுக்கு வரியா ?! பேசிக்கிட்டு இருக்கலாம். எனக்கும் போர் அடிக்குது” – நான். “டேய்ஸபாத்தியாஸ நீ நேரிலே வந்தா பேசுவியா ? நேரிலே வந்தா என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியும்” – விஜி என்னை கிண்டல் செய்தாள். அவளே மீண்டும் “சரி வர்ரேன்ஸஎனக்கும் பழைய நெனப்பெல்லாம் வருது. இன்னும் 1 மணி நேரத்தில்
நான் அங்க இருப்பேன்.” போனை வைத்தேன். இன்னும் ஒரு மணி நேரம்ஸ.. அதற்குள் நான் விஜியை பற்றி உங்களிடம் சொல்லி விடுகிறேன்.