எங்க ஏரியாவில் குடிக்க தண்ணீர் கிடைக்க ரொம்பவே கஷ்டம். லாரி தண்ணீர் கூட வாரத்துல ஒரு நாள் தான் வரும். அனேகமாக எல்லோர் வீட்டிலேயும் போர் இருந்தாலும் நிலத்தடி நீர் வற்றிப் போய் பம்புல காத்து மட்டும் தான் வரும். ஆனா சிலரோட வீட்ல மட்டும் கொஞ்சம் தண்ணீர் கிடக்கும். அப்படி தான். என் வீட்டு எதிர் வீட்ல இருக்கிற வள்ளி அக்கா வீட்ல தான் தேவைக்கு போக மிச்ச தண்ணியை தெரு மக்களுக்கு கொடுப்பாள்.
நாங்களும் ரொம்ப மகிழ்ச்சியா வள்ளி அக்காவை மனதார பாராட்டி விட்டு பிடிக்க ஆரம்பிச்சோம். ஆனா நம்ப ஜனங்களை பத்தி தெரியாது. ஏதோ அவசரத்துக்கு கொடுக்கிறாளே யோசிக்காம அவ வீட்டு முன்னாடி தண்ணி குடங்களை வச்சி காலையிலேயே வரிசை போட்டு அவங்க வாசல் கதவை திறந்து வெளியே போக வர முடியாம கஷ்டபடுத்த ஆரம்பிச்சுட்டாங்க. இதுல தண்ணி வந்த பின்னாடி காச் மூச்னு சத்தம், அடி தடி வேற.