இந்த முறை கடைசி நேரத்தில் தான் பொங்கலுக்கு ஊருக்கு போக தீர்மானித்தேன். பஸ் ஓடவில்லை. ரயில் நிலையங்களில் நடக்க கூட முடியாத அளவில் கூட்ட நெரிசல். பெண்களும் குழந்தைகளும் முண்டியடித்து கொண்டு செல்லும் போது, அவர்களை இடித்து தள்ளி விட்டு டிக்கெட் கவுண்டரை நோக்கி சொல்ல தயங்கி வெளியே வந்து படிக்கட்டில் அமர்ந்தேன். அங்கே ஒரு பெண் என்னைப்போலவே கூட்டத்துக்குள் செல்ல பயந்து என்னை பரிதாபமாக பார்த்தாள். பிறகு என்னிடம் டிக்கெட் கிடைக்குமா என்று விசாரிக்க நானும் என்னுடைய நிலையை சொல்ல இருவரும் வேதணையோடு எங்கள் நிலையை பகிர்ந்து கொண்டோம்.
அப்போது தான் அந்த பெண் டாக்ஸில ஷேரிங் பண்ண ஆள் இருந்தா கூட ஊருக்கு போய் சேர்ந்திடுவேன். 4 மணி நேர பயணம் யாராவது கிடைப்பாங்களா என்று கேட்டபோது அது நல்ல ஐடியாவாக தோன்றியது. பிறகு நான் அவளிடம் எந்த ஊர் என்று கேட்டபோது தான் அவளும் எனது பக்கத்து ஊர் என்பதை தெரிந்து கொண்டேன். பிறகு அவள் முன்பே கால் டாக்ஸிக்கு போன் பண்ணிய போத அவன் டோல்கேட்டோடு ஒரு தொகையை சொன்னான்.