“ராகுல் எந்திரிடா மணி 4 ஆச்சு, அலாரம் அடிக்குது பாரு. கல்யாணதுக்கு கிளம்பனும்ள..!!” என்று அம்மா எழுப்ப, சரியா அலாரமும் அடிக்க, நான் எழுந்து என் நண்பர்கள் ரமேஷ், சுரேஷ் ரெண்டு பேருக்கும் மெசேஜ் பண்ண, அவங்களும் எழுந்தாச்சுனு ரிப்ளை பண்ணுனாங்க.
நானும் எழுந்து குளிச்சு முடிச்சு ரெடியாகி, காசு எடுத்து என் தோழி கல்யாணத்துக்கு கிளம்பி பஸ் ஸ்டேண்ட் வர, அவனுகளும் வந்தாங்க.
அப்ப ரமேஷ், “ஏன்டா, இந்த கல்யாணதுக்கு அவசியம் போகனுமாடா. ஏன்டா மனசன காலங்காத்தால கொல்லறீங்களாடா..!!” என்க,
சுரேஷ் அவனிடம், “டேய், ஏன்டா நம்ம பிரண்ட் மேரேஜ் தானடா, அப்டியே நம்ம பழைய நண்பர்களையும் பாக்கலாம்டா. எல்லாரையும் பாத்து எவ்வளவு நாளாச்சு..?” என்க ரமேஷ் சரினுட்டு பஸ்ஸில் சீட்டுபோட, நாங்க கிளம்பினோம்.
பஸ் 5 மணிக்கு கிளம்பி சரியா மணி 7 என் கையில் நாங்க எறங்கவேண்டிய பஸ் ஸ்டேண்டில் நிறக, நாங்க வேகமா இறங்கி, கல்யாண மண்டபத்தை பாத்து நடந்தோம். முகூர்த்தத்த பாக்க இல்லீங்க, உங்களுக்கே தெரியும்ள நாங்க இன்னும் சாப்டவேயில்லை. பசி கண்களை கட்ட, நாங்க போட்டி போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.
மணி 7.15 என் கையில் மண்டபத்தை அடைய, அங்கே எல்லாம் பரபரப்பா நடந்திட்டிருந்தாங்க. ஆனா தாலி கட்டியாச்சு அதை பாக்க, எங்களுக்கு கொடுத்து வைக்கலியே என் கையில் எங்க தோழியின் அப்பா எங்களை வரவேற்று உபசரித்தார்.
உண்மையில் என் தோழி கொஞ்சம் பணம் அதிகம் படைத்தவர்கள்தான். நான் அவர்களிடம், “ஏங்கடா தாலி கட்டுவதை பாக்க முடிலீனு ஃபீல் பண்றீங்களா..?” அப்டிங்க,
அவனுக, “நீ வேறடா, வா எல்லாம் சாப்பிட போறாங்க, நாமும் போகலாம்..!! ஆனாலும் தாலி கட்டின அந்த இளிச்ச வாயனை பாக்க முடியலீனு கொஞ்சம் மன கஷ்டம் தாண்டா..!!” என்றான் சுரேஷ்.
அதற்கு ரமேஷ், “எங்கடா போகிற போறான். இங்கதான் வெள்ளை வேட்டி, சட்டையுடன் சுத்திட்டீருப்பான் பாரு..!!” என்றிட்டு மூவரும் ஒன்றாக உக்காந்து சாப்பிட்டு முடிக்க, அப்டியே கல்யாண மண்டபத்தில் எல்லாரும் குட்டு குட்டா உக்காந்து பேசிட்டிருந்தாங்க.
நாங்க மூன்று பேரும் அதே மாதிரி உக்காந்து பேசிட்டிருக்கையில் என் தோழி மணப் பெண் கோலத்தில் வந்தாள்.
அவள் அழகை பாக்கையில், ஆஹா..!! சூப்பரா இருந்தாள்.
உண்மையிலேயே அவள் அழகு கண்ணை பறித்தது. நாங்கள் அவளை கவனிக்க, அவளும் கவனிச்சிட்டாள். எங்களிடம் நடந்து வந்தாள்.
பின்னேயே அவங்க அப்பாவும் நடந்து வர, அவள் எங்களிடம் வந்து, “ஏங்கடா லேட்டு, முன்னாடியே வாங்கடானு, சொல்லிருந்தேன்ல..” என்க, அவள் அப்பா வந்து, “தம்பி சாப்பிட்டாச்சா..?” என்க, மூவரும் மாடு மாதிரி தலையாட்டினோம்.
உடனே ரமேஷ், “நாங்க அப்பவே வந்திட்டோம். உன்னைதான் பாக்க முடியலை..!!” என்றான்.
“சாரிப்பா, நான்தான் கவனிக்கலை..” என்க, அவள் அப்பன் சொந்தக்காரன்கள் வந்திருக்காங்கனு பாக்க போயிட்டான்.