ஒரு திருமண வீட்டில் தான் என் பால்ய தோழி உஷா சந்தித்தேன். ஆஹா எப்படி மாறி விட்டாள். என்னால் உஷாவை அடையாளமே கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் தெரியல. ஆனா அவ என்னை செம பெர்ஃபெக்டா அடையாளம் கண்டு கொண்டு ஓடி வந்து கட்டிப் பிடித்து கொண்டாள். அவள் தான் என்னால் மறக்க முடியாத தோழி உஷா என்பதை நான் உணர்ந்து அப்போது உஷாவைப்போல் என்னால் வெளிக் காட்ட முடியவில்லை. அந்த திருமண மண்டபத்தில் மணமக்களை வாழ்த்தி விட்டு விருந்து சாப்பிட்டு முடித்து விட்டு வேகமாக உஷா அழைத்து கொண்டு வெளியே வந்தேன்.
அவளோடு டாக்ஸியில் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போதே எங்களின் குடும்பங்களை பற்றி தெரிந்து கொண்டு பரஸ்பர நல விசாரிப்புகளை முடித்துக் கொண்டோம். எவ்ளோ வருடம் ஓடி விட்டது. இருவருக்குமே இப்போது திருமணம் ஆகி, குழந்தைகளை பெற்று, அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போய் இருந்தோம். பல முறை உஷாவின் நினைவுகள் எனக்குள் அடிக்கடி வந்து போகும். பொதுவா ஆண்களைப போல் பெண்களை நட்பு பேணுவது இல்லை. ஆண்கள் ஸ்கூல் டேஸ்ப் ஃப்ரெண்ஷிப்பை கூட ஆவலோடு தேடிப் பிடித்து நட்பு பாராட்டுவார்கள்.