ஷ்…ஷ்… அப்பா.. என்ன கூட்டம்..!!” என அலுத்துக் கொண்டாள் சத்யா. !
அவள் அருகே உட்கார்ந்திருந்த பூவரசு.. மெலிதாகப் புன்னகைத்தான்.
” ம்…ம்…” அவன் வேலையில் சேர்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.!
நிறைமாத கர்ப்பிணியைப் போல… மெதுவாக.. ஊட்டி மலையேறத் தொடங்கியது.. பேருந்து. .! ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த… சத்யாவின் கூந்தல் உதிரிகள்… ஓயாமல் அவன் முகத்தில் வந்து புரண்டது. !
கல்லார்வரை… மிதமான வெப்பத்துடன் வீசிய காற்று. .. கல்லார் தாண்டியதும்.. குளிர்ச்சியாக மாறிவிட்டது.!!
அவள் தோளில் கை போட்டு.. அணைத்தவாறு உட்கார்ந்திருந்தான் பூவரசு. அவன் கண்ணங்கள் ஷேவிங் பளபளப்பில் மின்னின..!
” சத்யா. .” அவள் காதருகே கிசு கிசுத்தான்.
” உம்..?” அவன் முகம் பார்த்தாள்.
” ஒரு ஜோக் சொல்லேன்..”
” என்ன ஜோக்..?”
” சிரிப்பு வர்ற மாதிரி…”
” சிரிப்பு வந்தாத்தான் அது பேரு ஜோக்..”
” வர்ற மாதிரி சொல்லு..”
” ஏ ஜோக் பரவால்லியா…?” குறும்பாகக் கண் சிமிட்டினாள்.
” ‘ஏ’ வா..?”
” ஏன்…?”
”பக்கத்துல இருக்கறவங்க காதுல விழுமே..?”
” அவங்க செவிட்டுல ஒரு அறைகுடுங்க அப்ப விழாது.”
பேருந்து என்பதால் அவள் கன்னத்தில் செல்லமாக அடிக்கும் ஆசையைக் கட்டுப்படுத்தினான்.!
” லொள்ளுதான.. ?” என்றான்.
சிரித்தாள்.” அவங்க காதுல விழுந்தா.. அதுக்கு நான் பொறுப்பில்ல…”
” அப்ப ‘ஏ ‘ வேண்டாம். ”
” சரி… ரகசியமா சொல்றேன்.! சன்னமா..? ம்..?”
மறுத்துவிட்டான் ” ம்கூம். .! ஏ.. ஜோக்கெல்லாம் வாய்விட்டு சிரிக்கனும்..! அதும் என் சத்யா வாயால கேட்டா.. ரசிச்சு சிரிக்கனும். .”
” அப்ப ஊட்டி போன பின்னாலதான். .”
” பரவால்ல… !ஆமா உனக்கு.. ‘ஏ’ ஜோக்கெல்லாம் எப்படி தெரியும்.? பலான புக்ஸ் எல்லாம் படிப்பியா..?”
” ஏன். . படிச்சாத்தான் என்னவாம்..? ஆனா பூவு..! இது எல்லாம் ஓஷோ சொன்னது..”
” ஓஷோவா..? அந்தாளு ஒரு சாமியார்தான..?”
” இல்லப்பா.. ! அந்தாளு ஒரு எதார்த்தவாதி..!”
” எதார்த்தவாதின்னா.. ஏ ஜோக்கெல்லாம் சொல்லலாமா.? அந்தாளுக்கு லட்சக்கணக்கான சீடர்களெல்லாம் இருக்காங்கள்ள…. பல நாடுகள்ள..?”
” ம்..” என்றுவிட்டு மெல்லிய குரலில் சொன்னாள் சத்யா ”அந்தாளு ஏராளமான ஜோக்ஸ் சொல்லியிருக்கான். அதுல’ஏ’ ஜோக்கும் அட்க்கம்.! நம்ம இந்தியால… அன்மைக்காலத்துல.. காமத்தை ஆதரிச்சிப் பேசின.. ஒரே ஆன்மிகவாதி.. ரஜ்னீஷ் ஓஷோதான்.! காமத்தை பயண்படுத்தி.. சுலபமா தெய்வீகத்தை அடையலாம்னு சொன்ன ஆளு..! தந்த்ரானு ஒரு மார்க்கம்… காமத்தை தியானமா மாத்துதுன்னு எளிமையா சொன்னவன்.!! நம்ம தமிழ்ல கூட..’ காமம் மலரினும் மெல்லிதுனு..’வள்ளுவரும்…! ‘ஆதலால் காதல் செய்வீர்னு..’ பாரதியும் சொல்லிருக்காங்களே..! அதை தியானமா மாத்தறது எப்படின்னு.. தெளிவாவும். . திடமாவும் துணிஞ்சு சொன்ன ஒரே ஆள் இந்த ஓஷோதான்..!”
” செக்ஸ் குருன்னும் ஒரு பேர் இருக்கே..?”
” ஆமா..! செக்ஸ ஆதரிச்சிப் பேசினதால.. நம்மளால தவறா சித்தரிக்கப்பட்ட ஒரு ஆள்..! ஆனா அந்தாளு சொன்னது.. முழுக்க.. முழுக்க… ஆன்மிகம்தான்..!!”
” நீ.. அந்தாளோட சீடியா என்ன?”
” சீ டி..யா..??”
” சீடன்… சீடி. .?”
” ஓ..!” சிரித்தாள் ” சீடன்னு.. சொன்னா அதோட அர்த்தமே வேற..! அர்ப்பணிப்பு மட்டுமே.. குரு.. சீடனுக்கு நடுல நடக்கும்! ஆனா என்னால அது முடியாது! விசிறினு வேணா சொல்லிக்கலாம்..”
”ஓ.!”
” காமம்ன்றது உச்சகட்டமான ஒரு பைத்திய நிலை.! அதைக்கடந்து.. தெய்வீகத்துல நுழையனும்ன்றதுதான்… அந்தாளோட உபதேசம்..!”
”என்ன சொல்ற.. காமம் உச்சகட்ட பைத்தியமா..?”
” எஸ்…!! எதையும் அனுபவத்துல மட்டும்தான் கடக்க முடியும். .! ஒண்ணுலருந்து விடுபட.. அதுல நாம ஆழமா போகனும்..! காமமும் அப்படித்தான். . அதை முழு உணர்வு நிலையிலிருந்து அனுபவிச்சு.. முழுமையா கடக்கனும்ன்றதுதான் அந்தாளோட உபதேசம். .! சொற்பொழிவு.. பேச்சு..எல்லாம் காமத்தை ஆதரிக்கறமாதிரிதான் இருக்கும்..! ஆனா அது காமத்துலருந்து விடுபடத்தானே தவிற… அதுலயே நிலைச்சு நின்னிட இல்லை. ! நெறையப் பேரு அந்தாளு சொன்னத புரிஞ்சிக்கவே இல்லை… ! அதனாலதான் செக்ஸ் குருன்னு சொல்றாங்க…!!”
” அப்படியா. .?”
” பேசினா… நாள் கணக்கா பேசலாம் அதுபத்தி…! இன்னொரு நாள். .. இன்னொரு சந்தர்ப்பத்துல பேசலாம்…”
” ம்… ம்…!”
