இக்கதை 99’இல் நடந்த கதை. அப்போது எங்கள் ஊரில் இருந்து சில மைல் காட்டுக்குள் சென்றால்தான் எங்கள் குலதெய்வ கோவிலுக்கு போக முடியும். எங்கள் ஊரில் கோவில் இருந்தும் சாமி அங்கே காட்டுக்குள் இருக்கிறார்.
வருடாவருடம், நாங்கள் சென்னையில் இருந்து எங்கள் ஊரில் சென்று தங்கி, பின் குறிப்பிட்ட நாளில் நாங்கள் காட்டுக்குள் என்று பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு வருவோம். ஊரில் இருந்து காட்டுக்கு போவது மிகவும் கடினமாக இருக்கும். அதனால் கூட்டமாக தான் நாங்கள் போவோம்.
பல குடும்பம் ஒன்றாக சேர்ந்து பாட்டு பாடி, கையில் தீப்பந்தம் ஏந்தி, பெண்கள் தலையில் பொங்கல் பானைகள் மற்றும் சமையல் பொருட்களை எடுத்து நடந்து செல்வோம். 15 கிமி தூரத்தை 5 மணி நேரம் ஆகும் குறைந்தது. சில நேரம் இரவு முழுவதும் நடந்து சென்று அங்கே சேர்வோம்.
இப்படி இருக்கையில் ஒரு முறை நாங்கள் சென்றபோது என் சொந்தகார பெண் பிரியா (அப்போது தான் அவள் திருமணம் நிச்சயம் ஆகியிருந்தது) எங்களோடு வந்தாள். அவர்கள் அம்மா அப்பா நடக்க முடியவில்லை என்று இவளை எங்களோடு அனுப்பியிருந்தார்கள்.