அன்னை சாயங்கலாம் அலுவலகத்தில் அத்தனை பேரும் கிளம்பி போன பிறகு வழக்கமா அலுவலகத்தில் அக்கவுன்ட்ஸை கவனிக்கும் விசாலாட்சி மாமி முகத்தில் பதற்றத்தை கண்ட போதே எனக்கு எல்லாம் புரிந்து போனது. நான் விசா மாமியை பார்த்து விட்டு நடப்பது எதுவும் தெரியாதது போல் தான் இருந்தேன். அவள் பல முறை கவுண்டரில் பணத்தை சரி பார்த்தாள். பிறகு கணக்கு நோட்டை கூர்மையாக பார்த்தாள்.
பிறகு அவளோட டேபிள் டிராயர், ஹேண்ட் பேக் என்று பார்த்து விட்டு, என்னிடம் வந்து பதற்றம் கலந்து குரலோடு,
“சுதா, ஒரு பிராப்ளம் டி. கேஷ்ல 3,000 மிஸ் ஆகுது. அக்கவுண்ட்ஸ் நல்லா சரி பார்த்துட்டேன். எப்படி பணம் குறையுதுனு தெரியல. ஆபீஸ்ல எல்லோருமே போய்ட்டாங்க. யாருக்கிட்டோ போய் கேட்க முடியும். போன்ல கூட இதை கேட்க முடியாது. என்ன பண்றதுனு தெரியல சுதா. அடுத்த ரெண்டு நாள் ஆபீஸ் லீவு, எம்டி கிட்டே கணக்கை வேற மீதி பணத்தை எண்ணி கணக்கோடு ஒப்படைக்கணும் என்ன பண்றதுனு ஒண்ணும் புரியல டி”என்று புலம்ப ஆரம்பித்தாள்.