(இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் வாழ்க்கையில் நடந்த உண்மையானவை. இதில் கற்பனைக்கு இடமில்லை. இந்தத் தொடர் கதை உங்களை மெய் மறக்க வைக்கும் என்பதற்கு நான் உத்திரவாதம்.
உங்கள் ஊக்கமும். பேராதரவும் என்னை உற்சாகப்படுத்தும். தொடர்புக்கு: com)
முன் கதை.
ஜெய்யிற்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. பெங்களூருக்கா?. போனால் திரும்பி வர குறைந்தது ஒரு வாரம் ஆகுமே. அது வரைக்கும் ஸாயிதாவை பாக்க கூட முடியாதே. வீட்டுக்கு போனால் ஸாயிதாகிட்ட சொல்லிட்டாவது வரலாம். அனால் இவனுங்க இப்படியே நம்மள பார்சல் பண்ணி அனுப்புறானுங்களே. என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டே வண்டியில் ஏறி தனது பெங்களூர் பயணத்தை தொடர்ந்தான்.
இனி.
மாலை மணி 4. கார் எலக்ட்ரானிக் சிட்டி தாண்டி. HSR லே அவுட்டில் வலது புறம் திரும்பி மாரத்தஹள்ளி. வந்து. BEML பேக்டரியை அடையும் போது மணி மாலை 5:30 ஆகி விட்டது. உள்ளே சென்று மெஷினை பார்வையிட்டான். முழுவதும் பிரிக்க வேண்டியதிருந்தது. பிரித்து முடிக்கவே மணி அதிகாலை 3: 00 மணி யாகியிருந்தது. உடம்பு டயர்ட் வேற. அங்கேயே ஸ்டார் ரூமில் படுத்து உறங்கிப்போனான்.
மறுநாள் காலை 8 மணிக்கு ஒரு சூப்பர்வைசர் வந்து அவனை அழைத்துக்கொண்டு இருவரும் டோமலூரில் உள்ள கம்பெனி கெஸ்ட் ஹவுஸுக்கு போனார்கள். அங்கு இவனுக்கு ரூமை திறந்து விட்டு ரெடியானவுடன் போனில் கூப்பிடச்சொல்லி அவர் சென்றுவிட.