முதலில் இந்த கதைக்கு பழிக்கு பழி என்றுதான் வைக்கலாம் என்று இருந்தேன் அப்புறம் அதே பெயரில் ஒரு கதை இருப்பதால் இந்த தலைப்பில் எழுதுகிறேன் .
இந்த கதையை கதாநாயகனே கதை சொல்வது போல் அமைத்து உள்ளேன் இனி அவனே சொல்வான் கதையை .
வணக்கம் என் பெயர் ரமேஸ் இல்ல ராம் இல்ல ரகு இல்ல ஜான் இல்ல ஜேம்ஸ் இல்ல ஜேக்கப் இல்ல அன்வர் இல்ல அலாவுதீன்
ஆமா எனக்கு பல பேர் இருக்கு ஆனா என் உண்மையான பேர் சந்திரன் .நான் நல்லவன் இல்ல ரொம்ப கெட்டவன் .
நான் கெட்டவன மாறுனதுக்கு ஒரு சின்ன பிளாஸ்பேக் உடனே சொல்லி முடிச்சுடுறேன் .அப்ப எனக்கு ஒரு 10 வயசு இருக்கும் எங்க அப்பா ஒரு நேர்மை தவறாத கலெக்டர் .ரொம்ப நல்லவர் .நான் எங்க அம்மா எங்க அக்கா இப்படின்னு ஒரு குருவி கூடு மாதிரி இருந்துச்சு .
ஆனா நல்லதுக்கும் நேர்மைக்கும் தான் எண்ணைக்குமே நல்லது கிடைக்காதே .எங்க அப்பா நேர்மையா இருந்ததால பல இடத்துல பல அரசியல் வாதிகள் பல ரவுடிகள பகைச்சுகிட்டாறு இதனாலே பல இடங்களால ட்ரான்ஸ் பேர் ஆகிருக்காறு .கடைசியா நாங்க போன இடத்துல ஒரு சென்ட்ரல் மினிஸ்டர் ஓட வப்பாட்டி பேர்ல இருந்த இன்ஜினேரிங் காலேஜ் வத்தி போன குளத்துல கட்டுனதுன்னு தெரிஞ்சு அத முடினாறு .இதுனால பெரிய பிரசின்னை வந்துச்சு