கங்கா யமுனா சரஸ்வதி – 20

0
1189
பிரியா

திருமண வைபோவம் அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது..

கோபால் மாமா என்னை தனியாக கூப்பிட்டார்..

என்ன மாமா என்று அவரிடம் சென்று கேட்டேன்..

இரண்டு டம்ளர்களை என்னிடம் நீட்டினார்..

பிரியா.. இந்த டம்ளரை ராஜா யமுனாவுக்கு குடு.. இதுல பால் பாதாம்.. பழம் பஞ்சாமிர்தம் எல்லாம் கலந்தது..

பொண்ணும் மாப்பிள்ளையும் மாத்தி மாத்தி எச்சி வச்சி குடிக்கனும்..

இந்த டம்ளர் நம்ம விஷ்ணுவுக்கு.. இது வெறும் லெமன் ஜூஸ்தான்.. இந்த ஜூஸ்ல மயக்க மருந்து கலந்து இருக்கேன்.. இதை எப்படியாவது விஷ்ணுவுக்கு குடுத்துடு.. என்றார்..

எனக்கு ஒரே ஆச்சரியம்..

என்ன மாமா… விஷ்ணுவுக்கு மயக்க மருந்தா எதுக்கு மாமா.. என்று அவரை ஆச்சரியமாக பார்த்தேன்..

இல்லம்மா.. என்ன பண்றது.. கல்யாணம் ஆகி அவன் பொண்டாட்டி கங்கா உடனே மண்டபத்த விட்டு போய்டா.. பாவம் அவன் முகம் எப்படி வாடி போச்சு தெரியுமா..

ஏற்கனவே தான் கட்டிக்க இருந்த யமுனாவை அவன் தம்பி ராஜா அடம் பிடிச்சி கட்டிக்கிட்டான்.. அப்பவே விஷ்ணு முகம் ரொம்ப வாடி போச்சி..